தேசிய பொதுச் செயலாளராகும் அண்ணாமலை... அமித்ஷா வீட்டில் நடந்த ஆலோசனை...

By Admin | Published in செய்திகள் at ஜூன் 02, 2025 திங்கள் || views : 875

தேசிய பொதுச் செயலாளராகும் அண்ணாமலை...  அமித்ஷா வீட்டில் நடந்த ஆலோசனை...

தேசிய பொதுச் செயலாளராகும் அண்ணாமலை... அமித்ஷா வீட்டில் நடந்த ஆலோசனை...

தேசிய பொதுச் செயலாளராகும் அண்ணாமலை... அமித்ஷா வீட்டில் நடந்த ஆலோசனை...

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு, குறிப்பாக 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் திட்டமிட்டு தமிழ்கத்தில் கட்டியமை க்கப்பட்ட மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு, ஏன் பாஜக என்றாலே தமிழருக்கு எதிரான கட்சி என்கிற ஒரு பிம்பத்தை தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை உடைத்து, தமிழக மக்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கான ஆதரவு அலையையும், பாஜவுக்கான ஆதரவு அலையையும் ஏற்படுத்தியவர் அண்ணாமலை.

குறிப்பாக பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் எப்போதெல்லாம் தமிழகம் வருகிறார்களோ.! அப்போதெல்லாம் gobackmodi , gobackamithsha , என ட்ரெண்ட் செய்யப்பட்டு தமிழக மக்களே பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கு எதிராக இருக்கிறார்கள் என்கிற தோற்றத்தை முறியடித்து, welcome modi என ட்ரெண்ட் ஆகி தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்கிற ஒரு நிலையை கொண்டு வந்ததில் முக்கிய பங்கு இதற்கு முன்பு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலைக்கு உண்டு.

பாஜக என்றால் நோட்டா கட்சி, உங்க வேலையெல்லாம் வடமாநிலங்களில் வைத்து கொள்ளுங்கள், தமிழ்நாட்டில் உங்களுக்கு நோட்டா தான் போட்டி என கிண்டல் செய்து வந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து தமிழகத்தில் பல இடங்களில் இரண்டாம் இடம் பிடிக்க வைத்து, சுமார் 18 சதவிகித வாக்கு வங்கியை நிரூபித்து, பாஜக நோட்டா கட்சி என தெரிவித்தவர்கள் வாயடைத்து போனது மட்டுமில்லாமல், தமிழக பாஜக தொண்டர்களை தலைநிமிர செய்ததில் முக்கிய பங்கு வகித்தனர் இதற்கு முன்பு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை.

இந்நிலையில் தமிழக பாஜகவின் அசூர வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய அண்ணாமலை வகித்து வந்த பாஜக மாநில தலைவர் பதவி முடிவடைந்ததை தொடர்ந்து, அடுத்த மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார், குறிப்பாக பாஜக மாநில தலைவர் பதவி காலம் என்பது மூன்று வருடம் தான் என்பது அந்த கட்சியின் விதிமுறை, ஆகையால் கட்சியின் விதிமுறை பற்றி மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றம் செய்யப்பட்டு நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் தமிழக பாஜக அசுர வளர்ச்சிக்கு காரணமாக இருந்த, குறிப்பாக நோட்டா கட்சி பாஜக என்கிற நிலையை மாற்றி சுமார் 18 சதவிகித வாக்கு வாங்கி கட்சியாக பாஜக உருவெடுக்க காரணமாக இருந்த அண்ணாமலைக்கு பாஜக டெல்லி தலைமை என்ன பொறுப்பு வழங்க இருக்கிறது என்பது பாஜகவினர் மத்தியில் மட்டுமில்லை, பொதுவாகவும் பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தமிழக மக்களின் மத்தியில் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா இல்லத்தில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கிறது, இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ பி நட்டா, பாஜக தேசிய அமைப்பு செயலாளர் BL சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டுருக்கிறார்கள். இதில் அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று இருக்கிறது.

அப்போது, அடுத்து பாஜக தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட்ட பின்பு, அண்ணாமலைக்கு தேசிய அளவில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவி அல்லது தேசிய இளைஞரணி பதவி வழங்கப்படுவது குறித்து உறுதி செய்யப்பட்டது, மேலும் அண்ணாமலைக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் குறிப்பாக தென் மாநிலங்களில் மிக பெரிய வரவேற்பு உள்ளதால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக , ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களின் பாஜக பொறூப்பாளராக நியாயமிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா வீட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது.

Whatsaap Channel
விடுகதை :

ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?

விடுகதை :

தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?

விடுகதை :

மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?

ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!

ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!

கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்

கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்

யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை

யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை

கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

prev whatsapp Twitter facebook next