INDIAN 7

Tamil News & polling

விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா..? தொண்டர்களிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

14 நவம்பர் 2025 01:21 AM | views : 195
Nature

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தற்போது தி.மு.க. கூட்டணியில் இருந்து வந்தாலும், காங்கிரஸ் அடிமட்ட தொண்டர்களில் பெரும்பாலானோர் மற்றுல் சில நிர்வாகிகள் நடிகர் விஜய்யின் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் மேலிடத்துடன் உள்ள நெருக்கம் மற்றும் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்ற அறிவிப்பும் தான் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே இது போன்ற எண்ணத்தை ஊக்குவித்து உள்ளது.

ஆனால், தற்போது பதவிகளில் இருக்கும் பலரும் தி.மு.க. கூட்டணி தொடர்ந்தால் போதும் என்ற நோக்கத்திலும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் பலம் எவ்வளவு அதிகரித்துள்ளது, தேர்தலை சந்திக்க எவ்வாறு தயாராகி வருகிறார்கள்.

யாருடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அடங்கிய 12 பேர் கொண்ட குழு இன்னும் 2 வாரங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா..?

இந்த சூழ்நிலையில், கடந்த 11-ந்தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு (எஸ்.ஐ.ஆர்.) எதிராக தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் காமராஜர் உருவப்படம் இல்லை என்றும், ராகுல்காந்தியின் உருவப்படம் சிறிய அளவில் அச்சிடப்பட்டிருந்தது என்பதையும் காரணம் காட்டி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்தனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார் (சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்), பிரின்ஸ், தாரகை கத்பர்ட் ஆகியோரும் மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்டோரும் ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்ததோடு காங்கிரஸ் சார்பில் வருகிற 17-ந்தேதி எஸ்.ஐ.ஆருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் 12 பேர் கொண்ட குழு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய இருப்பது காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்குமா? என்ற எதிர்பார்ப்பை காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது.

விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா..? தொண்டர்களிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image புதுடெல்லி, டெல்லியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அப்போது அதில் கலந்து கொண்ட கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பிரதமர் மோடியின் பழைய புகைப்படத்தைப்

Image மதுரை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக எத்தனை தொகுதிகள் என்று முடிவாகிவிட்டதா?

Image சென்னை, கேரளாவில் ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள், வாத்துகள் அடிக்கடி செத்து மடிந்தன. இதை தொடர்ந்து இதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு

Image சென்னை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால்

Image சென்னை, தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.

Image சென்னை, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.முதல் உடல் பரிசோதனை மேற்கொள்வதற்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Image தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தவெக தலைவர் விஜய் கூறியதாவது:- இது ஒரு அன்பான தருணம்,

Image சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக எங்களது நிலைப்பாட்டை அடிக்கடி



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்