Tamil News & POLLING

 

மெரினாவில் இரவு நேர காப்பகம்: வீடற்றோர் தங்க வசதி.

3 months ago 15 டிசம்பர் 2025 02:19 AM 273 views
சென்னையில் மெரினா கடற்கரை முக்கியமான பொழுதுபோக்கு தளமாக திகழ்கிறது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அனைத்து தரப்பட்ட மக்களும் மெரினா கடற்கரையை பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

இதேபோல, சாலையில் பிச்சை எடுப்பவர்கள், வயதானவர்கள், வீடு இல்லாதவர்கள் இரவு நேரங்களில் மெரினா கடற்கரை மணற்பரப்பிலும், உட்புற சாலையின் ஒதுக்குப்புறங்களிலும் தூங்குவார்கள். இதனால், அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்து வந்தது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையிலேயே வீடு இல்லாதவர்களுக்கு இரவு நேர காப்பகம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, மெரினா கடற்கரை அண்ணா சதுக்கம் அருகில் உள்ள காலியிடத்தில் 2 ஆயிரத்து 400 சதுர அடியில் புதிதாக இரவு நேர காப்பகத்தை மாநகராட்சி கட்டியுள்ளது.

ரூ.86 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் இந்த காப்பகம் கட்டப்பட்டுள்ளது. தற்போது காப்பகத்தை சுற்றி நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் எழுப்பும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிந்து இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெரினா கடற்கரையில் இரவு நேரங்களில் தூங்கும் வீடு இல்லாதவர்களின் நலனை கருத்தில் கொண்டு அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் பின்புறத்திலேயே இரவு நேர காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தில் 80 பேர் வரையில் தங்க முடியும். இவர்களுக்கு பாய், தலையணை, போர்வை உள்ளிட்டவைகள் வழங்கப்படும். கழிவறை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காப்பக பராமரிப்பு பணியை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல, காப்பகத்தில் தங்கும் நபர்களுக்கு இரவு நேர உணவை அம்மா உணவகம் மூலம் வினியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு இந்த காப்பகம் திறந்து வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக AIADMK ADMK AMMK டிடிவி தினகரன் MK STALIN TTV DHINAKARAN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் சீமான் பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி தமிழகம் ரஜினிகாந்த் PMK கனமழை காங்கிரஸ் UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM பாமக பிரதமர் மோடி கைது அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION CONGRESS KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை கொலை அமமுக NELLAI EDAPPADI PALANISWAMI SEEMAN COIMBATORE மதுரை தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் கோவை திருநெல்வேலி ELECTION COMMISSION தென்காசி OPS சட்டசபை தேர்தல் THOOTHUKUDI TAMIL ACTRESS கீர்த்தி சுரேஷ் ஓபிஎஸ் திருப்பரங்குன்றம் நாம் தமிழர் கட்சி THIRUMAVALAVAN டாப் நியூஸ் நயினார் நாகேந்திரன் திருமாவளவன் டிரெண்டிங் நெல்லை TAMIL CINEMA தீபாவளி NORTHEAST MONSOON MADURAI விடுமுறை தேவர் AJITH வன்னியர் பாலியல் தொல்லை தமிழக அரசு கொரோனா