INDIAN 7

Tamil News & polling

சட்டசபை தேர்தல்: அதிமுக விருப்ப மனு பெற இன்று கடைசி நாள்

23 டிசம்பர் 2025 05:34 AM | views : 15
Nature

சென்னை,

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இந்த விருப்ப மனு கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து விருப்ப மனுக்களை அதிமுகவினர் தாக்கல் செய்து வருகின்றனர்.

மனு தாக்கல் செய்ய வரும்போது, பலரும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போல வேடமிட்டு வருகின்றனர். இதனால் இவர்களை பார்க்க அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் கூட்டம் அலைமோதி வருகிறது.

அதிமுக விருப்ப மனு ரூ.15,000-க்கும், புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான விருப்ப மனு ரூ.5000-க்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுகவினர் அளித்து வரும் விருப்ப மனுக்களை அமைப்பு செயலாளர்கள் முன்னின்று பெற்று வருகின்றனர். கடந்த 15ம் தேதி தொடங்கிய விருப்ப மனு விநியோகம் இன்றுடன் நிறைவடைகிறது.

எனவே போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, ரூ.15,000க்கு வரைவோலை எடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. விருப்ப மனுக்களை வழங்க இன்றே கடைசி நாள் என்பதால் , ஏராளானோர் இன்று மனு தாக்கல் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை, தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது.

Image சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக எங்களது நிலைப்பாட்டை அடிக்கடி

Image சென்னை, தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, கட்சிகள் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட தீவிர அரசியல்

Image சென்னை, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம்

Image சென்னை, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகே அக்கட்சியில் உள்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால், அப்போது ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததால் பிரச்சினை

Image அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகே அக்கட்சியில் உள்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால், அப்போது ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததால் பிரச்சினை வெளியே தெரியவில்லை.

Image காங்கிரஸ் கட்சிக்கு மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்பட உள்ளது. இதற்காக மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. அசோக் தன்வார் திருப்பூர்

Image சென்னை, கடந்த 2001-06 அதிமுக ஆட்சி காலகட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏவாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்து வந்த சுதர்சனம், பெரியபாளையம் அருகே உள்ள தானாக்குளத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.கடந்த



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்