INDIAN 7

Tamil News & polling

தை மாதத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்த அறிவிப்பு - டிடிவி தினகரன் தகவல்

26 டிசம்பர் 2025 11:32 PM | views : 34
Nature

மதுரை,

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக எத்தனை தொகுதிகள் என்று முடிவாகிவிட்டதா? தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி கட்சிகளும், கூட்டணியை உருவாக்க முயற்சிக்கும் கட்சிகளும் எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது உண்மை.

நண்பர் அண்ணாமலை எங்களை அலைபேசியிலும், நேரிலும் சந்திக்கும் போதெல்லாம் என்.டி.ஏ. கூட்டணியில் வர வேண்டும் என்றுதான் சொல்கிறார். ஆனால், அதுகுறித்து நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. கூட்டணிக்காக என்னிடம் பேசுவார்களே தவிர, நான் யாரையும் நேரில் சந்திக்கவில்லை.

ஆண்டிப்பட்டி தொகுதியை நமக்கு அளித்தால் மட்டுமே கூட்டணி. இல்லை என்றால் தனியாக கூட ஆண்டிப்பட்டி தொகுதியில் நிற்போம். பூத் கமிட்டி வேலைகளை முறையாக பாருங்கள். ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தால் நானே அறிவிப்பேன்.

எங்களின் தகுதியான வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கின்ற கூட்டணிக்குத்தான் நாங்கள் செல்ல இருக்கின்றோம். தை மாதத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தை மாதத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்த அறிவிப்பு  - டிடிவி தினகரன் தகவல்1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக எங்களது நிலைப்பாட்டை அடிக்கடி

Image அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள

Image அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.ம.மு.க. சார்பில் வரும் 14-ம் தேதி RUN FOR CHANGE என்ற பெயரில் மாபெரும் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்