INDIAN 7

Tamil News & polling

பேருந்தில் அநாகரீகம்.. பெண் பகிர்ந்த வீடியோ வைரல்.. விபரீத முடிவு எடுத்த நபர்..!

19 ஜனவரி 2026 11:49 AM | views : 166
Nature

கேரளாவில் பெண் பயணி ஒருவர் தனக்கு நேர்ந்த அநாகரீகத்தை வீடியோவாக இணையத்தில் பகிரவே, அந்த நபர் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இணையத்தின் ஆதிக்கம் அதிகரித்து வரவே, பலரும் தங்களின் சந்தோஷங்கள், வேதனைகள் என அனைத்தையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இது தீயாக பரவி பட்டி தொட்டி எல்லாம் பேமஸாகிவிடுகிறது. சமீபத்தில் கூட டெலிவரி பார்ட்னர் ஒருவர் எலி பேஸ்ட் ஆர்டர் செய்த நபரை தற்கொலையில் இருந்து காப்பாற்றியதாக பேசிய வீடியோ இணையத்தில் தீயாக பரவியது. இப்படி இணையதளம் இருமுனையாக பரவும் சக்தி கொண்டது.


அந்த வகையில், நேற்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பெண் ஒருவர் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடன் பயணித்த 42 வயதுடைய நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த இளம்பெண் அதை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்த நிலையில், அந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்