POLLING 📊 TN ELECTION 2026

 

அமெரிக்கா தரைவழி தாக்குதல் நடத்தினால்... தளபதிகளும், வீரர்களும் சுறாக்களுக்கு இரையாக நேரிடும்: ஈரான் எச்சரிக்கை

1 hour ago 30 மார்ச் 2026 07:30 AM | views : 12

தெஹ்ரான்

ஈரானுக்கு எதிராக தரைவழியே தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது என டிரம்ப் கூறி வருகிறார். அப்படி தரைவழி தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி தர தயாராக இருக்கிறோம் என்று ஈரான் தெரிவித்தது. ஒருபுறம் ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம் என கூறி வந்தபோதிலும், மறுபுறம் படைகளை வான், கடல், தரை என பல வழிகளில் ஈரானை நெருக்கும் வகையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.


ஈரானில் நாட்டை பாதுகாக்கும் பணியில் ராணுவம் ஈடுபடுகிறது. இதேபோன்று உச்சபச்ச தலைவர் உள்ளிட்டோரை பாதுகாக்கவும், எல்லை பாதுகாப்பு, வெளிநாட்டு தாக்குதல் போன்றவற்றை எதிர்கொள்வதற்காக இஸ்லாமிய புரட்சி காவல் படை செயல்படுகிறது. இந்த இரு அமைப்புகளுக்கு இடையே நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் உச்சபட்ச கட்டுப்பாட்டு பிரிவாக மத்திய கதம் அல்-அன்பியா தலைமையகம் செயல்பட்டு வருகிறது.


Also Read மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தல்; எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார்இந்நிலையில், அதன் செய்தி தொடர்பாளர் வெளியிட்டு உள்ள செய்தியில், மோதல் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எதிரிகளின் தளபதிகள், அதிகாரிகளின் வீடுகளை தாக்குவோம் என எச்சரித்து உள்ளார். ஈரானை டிரம்ப் தொடர்ந்து மிரட்டி கொண்டே, அமெரிக்க படைகளை போர் பகுதியில் இருந்து விலக்கி, மக்கள் தொகை அதிகம் இருக்கும் பகுதிகள் மற்றும் பொருளாதார மையங்களில் சென்று ஒளித்து வைத்து கொள்கிறார் என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.


இதனை சுட்டி காட்டி அந்த செய்தி தொடர்பாளர் குற்றம்சாட்டியுள்ளார். டிரம்ப் குறிப்பிட்ட தரைவழி தாக்குதல் அச்சுறுத்தல்கள் நடந்தால், பின்னர் பாரசீக வளைகுடாவில் உள்ள சுறாக்களுக்கு அமெரிக்க படை தளபதிகளும், வீரர்களும் இரையாவார்கள் என்று அதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஈரானின் அறிக்கை எச்சரித்து உள்ளது. ஈரானின் பாரசீக வளைகுடா உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமிப்போம் என்றும் தரை வழி தாக்குதல்களில் ஈடுபடுவோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறார் என இந்த உச்சபட்ச கட்டுப்பாட்டு பிரிவின் தலைமையகம் தொடர்ந்து கூறி வந்தது.



இதனை தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. ஈரானின் பல்கலைக்கழகங்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று நேற்று ஈரான் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எதிரிகளின் தளபதிகள், அதிகாரிகளின் வீடுகளை தாக்குவோம் என இன்று எச்சரித்து உள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI MK STALIN TAMIL NADU ANBUMANI RAMADOSS ADMK எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN AIADMK டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் PMK முக ஸ்டாலின் பாமக ரஜினிகாந்த் அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் CONGRESS இந்திய அணி காங்கிரஸ் கனமழை கோவை சீமான் கைது COIMBATORE சட்டசபை தேர்தல் PARLIAMENT ELECTION தமிழ்நாடு UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை பிரதமர் மோடி அமமுக தீபாவளி AJITH தென்காசி NELLAI ஓபிஎஸ் THIRUMAVALAVAN வன்னியர் நெல்லை TAMIL ACTRESS தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM ASSEMBLY ELECTIONS கீர்த்தி சுரேஷ் கொரோனா பாலியல் தொல்லை நடிகை SEEMAN NORTHEAST MONSOON கள்ளக்காதல் அஜித் OPS டாப் நியூஸ் டிரெண்டிங் SURIYA தூத்துக்குடி விடுமுறை CSK திருப்பரங்குன்றம் மதுரை MADURAI PRIME MINISTER MODI