POLLING 📊 TN ELECTION 2026

 

ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியில் விஜய்யின் பிரசாரம் ரத்து

3 hours ago 30 மார்ச் 2026 11:44 AM | views : 48

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில், பெரம்பூர் தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த விஜய், அந்த தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.


பெரம்பூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விஜய், அங்கிருந்து நேராக கொளத்தூர் தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக விஜய்யின் பிரசார வாகனம் கொளத்தூர் நோக்கி சென்ற நிலையில், அவரது வாகனத்தை சுற்றி பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, கொளத்தூரில் விஜய் பேசியபோது இடையில் ஆடியோ பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 4 நிமிடங்களில் விஜய் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு, கொளத்தூரில் இருந்து வில்லிவாக்கம் புறப்பட்டார்.


ஆனால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக விஜய்யின் வில்லிவாக்கம் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இந்நிலையில், வில்லிவாக்கம் பிரசாரத்தை ரத்து செய்த விஜய், நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.


இதனிடையே, விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் வில்லிவாக்கத்தில் கூடியிருந்த த.வெ.க. தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். அவர்களிடம் இது குறித்து பேசிய த.வெ.க. மாவட்ட செயலாளர் பூக்கடை முருகன், “பாதுகாப்பு குறைபாடு காரணமாக விஜய்யின் வாகனம் அங்குலம் அங்குலமாக நகர்ந்து வந்தது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காகவே விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. விஜய் மற்றொரு நாளில் வில்லிவாக்கம் தொகுதிக்கு மீண்டும் வருவார். பொதுமக்களும், தொண்டர்களும் பாதுகாப்பாக கலைந்து செல்ல வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி TAMIL NADU ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN ADMK டிடிவி தினகரன் AIADMK மு.க.ஸ்டாலின் தமிழகம் பாராளுமன்ற தேர்தல் PMK முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் பாமக அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி CONGRESS கனமழை கோவை தமிழ்நாடு சட்டசபை தேர்தல் INDIAN CRICKET TEAM கைது சீமான் EDAPPADI PALANISWAMI COIMBATORE PARLIAMENT ELECTION கொலை UDHAYANIDHI STALIN தீபாவளி அமமுக KEERTHY SURESH திருமாவளவன் வடகிழக்கு பருவமழை AJITH பிரதமர் மோடி NELLAI ASSEMBLY ELECTIONS TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை நெல்லை தேவர் வன்னியர் TAMIL ACTRESS THIRUMAVALAVAN தென்காசி கீர்த்தி சுரேஷ் அஜித் CSK பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் திருநெல்வேலி கொரோனா தூத்துக்குடி SEEMAN ELECTION COMMISSION மதுரை MADURAI PRIME MINISTER MODI நடிகை ஓபிஎஸ் கள்ளக்காதல் OPS SURIYA NORTHEAST MONSOON டாப் நியூஸ் டிரெண்டிங்