தொடர் மின்வெட்டு பிரச்சனை: மாற்றமல்ல மிகப்பெரிய ஏமாற்றம் - எச். ராஜா
சென்னை,
தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மின்வெட்டு பிரச்சனை..!!
சென்னை மற்றும் மதுரையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல நீண்ட நேரம் பேருந்துகளுக்காக மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை..!!
ஆபத்தான சூழ்நிலைதினந்தோறும் படுகொலைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் என சட்டம் ஒழுங்கு சீரழிந்து தமிழகமெங்கும் அமைதியற்ற ஓர் அச்ச உணர்வுள்ள ஆபத்தான சூழ்நிலை...
தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் போதையில் பொதுமக்கள் மீது கொடிய ஆயுதங்களைக் கொண்டு கொடூரமான வன்முறைத் தாக்குதலை நடத்தும் காட்சிகளை கணொளிகள் மூலம் ஊடகங்கள் வழியாகக் கண்டு மக்கள் அனைவரும் வேதனையில் கண்ணீர் வடிக்கும் நிலை...
அவலநிலைஅரசு மருத்துவமனைகளில் சரியான மருத்துவ சிகிச்சையும், போதிய சுகாதாரமும், உரிய பாதுகாப்பும் இல்லாமல் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தொடர்ந்து அவுதியுற்று வருவதாக வருத்தமளிக்கும் செய்திகளை அன்றாடம் ஊடகங்கள் வழியாகக் காணும் பரிதாப நிலை..!!
ஊடகங்கள் முன்பு அமைச்சர்கள் பக்குவமின்றி பேசுவதை மக்கள் விரக்தியோடு பார்க்கும் அவலநிலை..!!
ஆட்சி மட்டுமே மாறி இருக்கிறது..!!
ஆனால் காட்சிகள் மாறவே இல்லை...
திமுகவுக்கு பதில் தவெகதொலைக்காட்சி தொடர்களில் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பவர் அந்த தொடரில் இருந்து திடீரென விலகும் போது இனி இவருக்கு பதில் இவர் என புதிய கதாபாத்திரத்தின் புகைப்படத்தை தொடரின் விளம்பர இடைவேளையில் காண்பதைப் போல...
இனி திமுகவுக்கு பதில் தவெக என்பது போல தமிழகக்தின் இன்றைய ஆட்சி நிர்வாகத்தின் நிலை இருக்கறது.
மாற்றமல்ல மிகப்பெரிய ஏமாற்றம்திமுக ஆட்சியில் நடந்தேறிய அவலங்கள் தவெக ஆட்சியிலும் அலங்கோலங்களாக தொடர்ந்து வருகிறது.
2026 தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்டிருப்பது மாற்றமல்ல மிகப்பெரிய ஏமாற்றம்..!!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்: