INDIAN 7

Tamil News & polling

அடுத்த ரம்யா பாண்டியன் இவர்தான்...இசைவாணியை கலாய்க்கும் ரசிகர்கள்!

11 அக்டோபர் 2021 12:58 PM | views : 633
Nature

பிக்பாஸ் 5வது சீசன் ஆரம்பமாக போகிறது என்றதும் போட்டியாளர்கள் யார் யார் என்று ரசிகர்கள் தேடத் தொடங்கி விட்டனர். ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஒரு சில போட்டியாளர்கள் தான் வந்து இருக்கின்றனரே தவிர, அதிகமான போட்டியாளர்கள் புதுமுகங்களாக வந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து விட்டனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இசைவாணி முதல் போட்டியாளராக களம் இறங்கியிருக்கிறார். முதல் போட்டியாளர் என்பதால் முதலாவதாக கதைசொல்லி ரசிகர்களை தன் வசம் படுத்திவிட்டார்.

இசைவாணியின் சோகமான கதையை கேட்டு பலர் பீல் பண்ணி விட்டனர். இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் வரைக்கும் இவருடைய கதைக்கு ரொம்பவே ஃபீல் ஆகி ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் முதல் வார எலிமினேஷன் இவருடைய பெயர் இருந்ததால் அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும், அவருடைய நெகட்டிவ்வர்களுக்கு ஹாப்பி யாக இருந்து வருகிறது. அதனால் தான் அவருகளுடைய கருத்துகள் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

கம்பீரமான குரலுக்குச் சொந்தகாரியான இசைவாணி தன்னுடைய ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களை மறக்காமல் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து விடவேண்டும் என்று துடிப்போடு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து பலர் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஆனாலும் இதுவரைக்கும் அமைதியின் சொரூபமாகவும் ஜாலியாகவும் இருந்த போட்டியாளர்கள் முதல் வாரத்தை முடித்துவிட்ட நிலையில் தங்களுடைய உண்மையான முகத்தை மெல்ல மெல்ல காட்டுவார்கள் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இன்றைய ப்ரோமோ வில் இசை வாணி, பாவனி, ஐக்கி மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது பாவனிக்கு ஆதரவாக இசை வாணி பேசிக்கொண்டிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் அடுத்த ரம்யா பாண்டியன் என்று கூறிவருகின்றனர். அது மட்டுமல்லாமல இவர் மீது அப்படி என்ன ஒரு பொறாமையோ தெரியவில்லை, ரம்யா பாண்டியனுக்கு விஷ பாட்டில் என்று பெயர் வைத்து இருந்ததுபோல இவரை விஷ பாட்டில் 2.0 என்று பலர் கலாய்த்து வருகின்றனர். ஆனால் இசை வாணியின் ரசிகர்கள் இதற்கு கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்