INDIAN 7

Tamil News & polling

என் மகனே என்னை வெறுக்கிறான்...பிக்பாஸ் டீம் மேட்ஸ்களை கண்கலங்க வைத்த தாமரை!

13 அக்டோபர் 2021 06:18 AM | views : 758
Nature

நான் இங்கு வந்ததற்கு காரணமே இதுதான் என்று தாமரை பேசியதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்திருக்கிறது.

பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பல புதுமுகங்கள் அறிமுகமாகி இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் தற்போது பலரும் ரசிகர்களுக்கு பரிச்சயமான நபர்களாக மாற தொடங்கி விட்டார்கள். அதில் ஒருவராக தாமரைச்செல்வி இருந்து வருகிறார். தன்னுடைய வெகுளித்தனமான பேச்சாலும், கலகலப்பான குணத்தாலும் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர். ஒரு வாரத்திற்குள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். இவருடைய குழந்தை தனத்தை பார்த்து பலர் இவருக்கு ரசிகர்களாக மாரி இவருடைய பெயரில் ஃபேன்ஸ் பேஜ்களையும் தொடங்கிவிட்டனர்.

போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய கடந்து வந்த கடினமான கதைகளை கூறிக்கொண்டிருக்கும் டாஸ்க்கில் இதுவரைக்கும் பலர் தங்களுடைய கதைகளை கூறிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு சிலருடைய கதைகள் போட்டியாளர்களையும், ரசிகர்களின் மனதையும் கவர்ந்து விட்டது. அதற்கு தொடர்ந்து போட்டியாளர்களும் ரசிகர்களும் லைக்களையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டின் முதல் ப்ரோமோவாக தாமரைச்செல்வி கூறிய கதை தான் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒரு பாதியை கேட்டதுமே ரசிகர்கள் பீல் பண்ண தொடங்கிவிட்டனர்.

என்ன நடந்தாலும் ஜாலியாக சிரித்து கொண்டிருக்கும் பிரியங்கா இவருடைய கதையை கேட்டு கண்ணீர் வடித்தது இவருடைய கதைக்கு கிடைத்த அங்கீகாரமாக தான் இருந்து வருகிறது. யாருடைய கதையாக இருந்தாலும் சரி அதில் அவர்களுடைய மனசை தேற்றி ஒரு ஜாலியான மூவ்மெண்ட் கொடுத்துவிடும் பிரியங்காவே இந்த கதைக்கு கண்ணீர் சிந்தி இருப்பது ரசிகர்களின் மத்தியில் சிறு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தன்னுடைய மகன் மீது இவர் வைத்திருக்கும் பாசத்தையும் அவருக்காகத்தான், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் அவர் என்னுடன் வந்து விடவேண்டும் என்று இவர் கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்திருக்கிறது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்