POLLING FLAMES

 

குடியாத்தம்: தபால் ஓட்டுவரை நீண்ட பரபரப்பு - ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஊராட்சித் தலைவரான வேட்பாளர்!

4 years ago 13 அக்டோபர் 2021 07:01 AM | views : 243
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க 'அமோக' வெற்றி பெற்றுள்ளது. வாக்குச்சீட்டு முறை என்பதால் வாக்கு எண்ணிக்கையும் விடிய விடிய நடைபெற்றது.
ஆங்காங்கே சிறு சிறு பிரச்னைகளும், சுவாரஸ்ய சம்பவங்களும் நிகழ்ந்தன. வேலூர் மாவட்டத்திலும் பெருவாரியான இடங்களை தி.மு.க கைப்பற்றியிருக்கிறது. குடியாத்தம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் அங்குள்ள கே.எம்.ஜி கல்லூரியில் 152 மேஜைகளில் 630 அலுவலர்களால் எண்ணப்பட்டன. இந்த ஒன்றியத்திலிருக்கும் மோர்தானா ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பரந்தாமன், சீதாராமன், பங்காரு என்ற மூன்றுபேர் போட்டியிட்டனர்.வாக்கு எண்ணிக்கைவாக்கு எண்ணிக்கை முடிவின்போது, பரந்தாமன் 464 வாக்குகளும், சீதாராமன் 462 வாக்குகளும், பங்காரு 324 வாக்குகளும் பெற்றிருந்தனர்.


சீதாராமனைவிட பரந்தாமன் இரண்டு வாக்குகள் முன்னிலையில் இருந்தபோது, தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், சீதாராமனுக்கு தபால் ஓட்டு மூலம் கூடுதலாக ஒரு வாக்கு கிடைத்து. இதன்மூலம் அவரது வாக்கு எண்ணிக்கை 463-ஆக உயர்ந்தது. முதலிடத்திலிருந்த பரந்தாமனுக்கு தபால் ஓட்டும் கிடைக்கவில்லை. ஆனாலும், அவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். ஒரே வாக்கு வித்தியாசத்தில் ஊராட்சி மன்றத் தலைவரான பரந்தாமனுக்குத் தேர்தல் அலுவலர்கள் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழையும் வழங்கினர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK AMMK ADMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் MK STALIN TAMIL NADU ANBUMANI RAMADOSS இந்திய அணி PMK AIADMK ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தல் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் கோவை தமிழகம் தமிழக வெற்றிக் கழகம் CONGRESS INDIAN CRICKET TEAM பாமக கனமழை முக ஸ்டாலின் கொலை அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE சீமான் நெல்லை NELLAI தேவர் கைது தமிழ்நாடு KEERTHY SURESH பிரதமர் மோடி வன்னியர் OPS அமமுக SURIYA AJITH TAMIL ACTRESS ஓபிஎஸ் சூர்யா கொரோனா சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN அஜித் ELECTION COMMISSION பாலியல் தொல்லை வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION கள்ளக்காதல் தென்காசி கீர்த்தி சுரேஷ் CSK திருப்பரங்குன்றம் TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை அன்புமணி RAJINIKANTH நடிகை தூத்துக்குடி மதுரை