INDIAN 7

Tamil News & polling

இந்திய இளைஞர்களின் கனவுகளுக்கு அக்னிச் சிறகுகள் கொடுத்தவர் கலாம் - கனிமொழி

15 அக்டோபர் 2021 04:54 AM | views : 712
Nature

இந்திய இளைஞர்களின் கனவுகளுக்கு அக்னிச் சிறகுகள் கொடுத்தவர் கலாம் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி புகழாரம் சூட்டியுள்ளார்.


இந்தியாவின் ஏவுகணை நாயகனும், முன்னாள் குடியரசுத்தலைவருமாகிய மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 90 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அப்துல் கலாம் அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்திய இளைஞர்களின் கனவுகளுக்கு அக்னி சிறகுகள் கொடுத்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரது நினைவைப் போற்றும் வகையில் அனைவருக்கும் நம்பிக்கை தரக்கூடிய நல்ல எதிர்காலத்தை அமைப்போம் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,




இந்திய இளைஞர்களின் கனவுகளுக்கு அக்னிச் சிறகுகள் கொடுத்த, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் #அப்துல்_கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவரது நினைவைப் போற்றும் வகையில், அனைவருக்கும் நம்பிக்கைத் தரக்கூடிய நல்ல எதிர்காலத்தை அமைப்போம். pic.twitter.com/yVGUKNHSl2




- Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 15, 2021

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்