INDIAN 7

Tamil News & polling

அன்று பாபா; இன்று ஜெய்பீம்; அவர்களுக்கு இது புதிதல்ல; பணத்துக்காக மிரட்டல்; சீண்டும் பாரிவேந்தர்!

19 நவம்பர் 2021 12:04 PM | views : 656
Nature

ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு புகைப்படத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு பணம் தான் நோக்கமே தவிர வேறல்ல காரணம் என இந்திய ஜனநாயக கட்சி தலைவரும், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக அதிபருமான பாரிவேந்தர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு புகைப்படத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றால் அதன் நோக்கம் என்னவாக இருக்கும், பணத்துக்காக தான் மிரட்டுகிறார்கள் என ஒரே போடாக போட்டார். அவர்களுக்கு வேறு பிரச்சனை கிடைக்கவில்லை என்பதால் இப்படி செய்வதாகவும், அவர்களுக்கு இது புதிதல்ல எனவும் பாரிவேந்தர் தெரிவித்திருக்கிறார்.

பாபா திரைப்பட விவகாரத்திலும் இதேபோல் அவர்கள் செய்திருப்பதாகவும், பத்திரிகை, தொலைக்காட்சிகள் தங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காக இது போன்ற பிரச்சனைகளில் ஈடுபடுவதாக பாரிவேந்தர் குற்றஞ்சாட்டினார். அவர்கள் அவர்கள் என்று கூறினாரே தவிர வெளிப்படையாக பாமக என எந்த இடத்திலும் அவர் தனது பேட்டியில் குறிப்பிடவில்லை. எஸ்.ஆர்.எம். . பல்கலைக்கழகம் குளம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக ராமதாஸ் 5 ஆண்டுகளுக்கு முன்பு விடுத்த அறிக்கையே பாரிவேந்தரின் பாமக மீதான கோபத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை. பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாட்டில் அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக மாநிலம்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்