INDIAN 7

Tamil News & polling

வருத்தம் தெரிவித்த ஜெய்பீம் இயக்குனர்

21 நவம்பர் 2021 03:54 PM | views : 704
Nature

வருத்தம் தெரிவித்த 'ஜெய் பீம்' இயக்குனர்

ஒரு காலண்டர் படம் சமூகத்தை குறிப்பதாக புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை

குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக காலண்டரை காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல.


ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை வன்முறையாளர்களாக சித்தரித்ததாக எழுந்த சர்ச்சை மற்றும் எதிர்ப்புகளையொட்டி, அப்படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட இத்திரைப்படம், பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் வலிகளைப் பிரதிபலிபதாக அமைய வேண்டும் என விரும்பினேன். இத்திரைப்படம் ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆகவே படத்தின் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இக்கட்டான சூழலில் அக்கறையோடு எங்களுடன் நிற்கிற திரையுலகத்தினருக்கும், அரசியல் இயக்கங்களுக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், ஆதரவளித்த முகமறியா அனைத்து நட்புகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை. பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாட்டில் அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக மாநிலம்

Image சென்னை, பா.ம.க. செய்தி தொடர்பாளர் (அன்புமணி தரப்பு) வக்கீல் பாலு, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, ஒரு அரசியல் கட்சியில் செயற்குழு,

Image சேலம், சேலத்தில் இன்று (திங்கட்கிழமை) டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. காலை 10 மணி முதல் 11.30 மணி வரை செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதன்பிறகு

Image டிட்வா புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர்

Image சென்னை, பாட்டாளி மக்கள் கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் வரும் 29-ம் தேதி சேலம்

Image டிட்வா புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்