INDIAN 7

Tamil News & polling

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீ மதியை தூக்கி செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது!

04 ஆகஸ்ட் 2022 06:39 AM | views : 634
Nature

கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராமலிங்கம்-திருமதி செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி.

இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தவர் கடந்த ஜூலை 13 ஆம் தேதி பள்ளி விடுதியில் 3 வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.

பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறி கலவரக்காரர்கள் பள்ளி வளாகம் முழுவதும் அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஜூலை 23ஆம் தேதி அன்று பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது பள்ளி மாணவி மரண விவகாரத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாடியில் இருந்து விழுந்து சுயநினைவின்றி கிடந்த மாணவியை பள்ளி காவலர் உள்ளிட்ட 3 ஆசிரியைகள் சேர்ந்து தூக்கி வரும் சிசிடிவி வீடியோ பதிவு தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்