INDIAN 7

Tamil News & polling

எப்போ சார் நயன்தாராவை திருமணம் செஞ்சிக்கப் போறீங்க?

28 ஜூன் 2021 07:00 AM | views : 693
Nature

ஒட்டுமொத்த திரையுலகமே வியக்கும் வகையில் விக்கி - நயன் ஜோடி காதலித்து வருகின்றனர். பிற நடிகைகளைப் போல் காதலை மறைக்காத நயன்தாரா, எங்கு சென்றாலும் விக்கியுடன் தான் காணப்படுகிறார். வெளிநாடு டூ ஷூட்டிங் வரை எங்கு சென்றாலும் இந்த காதல் ஜோடி ஒரு ரொமாண்டிக் போட்டோவை பதிவேற்றி வருகின்றனர்.


கடந்த 5 வருடங்களாக இந்த நயன் - விக்கி ரொமாண்டிக் ஜோடி லிவ்விங் டுகெதராக ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் லெவலுக்கு உயர்ந்துவிட்ட நயன்தாரா இந்த வருடமாவது கல்யாணம் செய்து கொள்வாரா...? என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.


சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவனிடம் ரசிகர்கள் அடிக்கடி கேட்கும் ஒரே கேள்வி எப்போ சார் நயன்தாராவை திருமணம் செஞ்சிக்கப் போறீங்க? என்பதாக தான் இருக்கும். அப்படித்தான் நேற்று சன்டே ஸ்பெஷலாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விக்கியிடம் ரசிகர் ஒருவர், நயன்தாராவை இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆவலுடன் காத்திருக்கிறேன், எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.


அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் ரொம்ப செலவு ஆகும் ப்ரோ. கல்யாணம் மற்றும் மற்ற விஷயங்களுக்கு... அதனால், திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். கொரோனா செல்வதற்காகக் காத்திருக்கிறேன், என பதிலளித்துள்ளார். கொரோனா முதல் அலை ஆரம்பித்ததில் இருந்தே நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், ஏன் ரகசிய திருமணமே செய்து கொண்டுவிட்டதாகவும் சோசியல் மீடியாக்களில் வதந்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்