INDIAN 7

Tamil News & polling

தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி!

11 அக்டோபர் 2022 10:30 AM | views : 1244
Nature

தேவர் ஜெயந்தி நிகழ்வு ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையேயான அதிகாரப் போட்டியாக மாறியிருக்கும் நிலையில், பிரதமர் மோடி தேவர் ஜெயந்தியில் பங்கேற்க இருப்பதாக ஒரு தகவல் சுழன்றடித்து வருகிறது.





பிரதமர் மோடி தேவர் குருபூஜை நிகழ்வுக்காக ராமநாதபுரம் மாவட்ட பசும்பொன் வர இருப்பதாகவும், விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





பிரதமர் மோடியின் தம்பி தாமோதர்தாஸ் பங்கஜ் மோடி சமீபத்தில் தேவர் நினைவிடம் சென்று மரியாதை செலுத்திய நிலையில், பிரதமர் மோடியின் இந்த வருகை அமைந்திருக்கிறது.



முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்"

பாஜக, தென் மாநிலங்களை குறிவைத்து தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் மோடியின் இந்த நகர்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.



பரபரக்கும் பசும்பொன்! முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் வருகிறார் பிரதமர் மோடி! பாஜகவினர் உற்சாகம்! பரபரக்கும் பசும்பொன்! முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் வருகிறார் பிரதமர் மோடி! பாஜகவினர் உற்சாகம்!



பல்வேறு மாநிலங்களிலும், தங்கள் பலத்தை அதிகரிக்க, அப்பகுதிகளில் செல்வாக்கு மிக்க தலைவர்களுக்கு சிலை அமைப்பது, பிறந்தநாள் விழாக்களை விமரிசையாக கொண்டாடுவது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது பாஜக. அந்தவகையில், லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் பல்வேறு சமுதாய தலைவர்களின் விழாக்களை சிறப்பாக நடத்தி வருகிறது பாஜக. இந்நிலையில் தான் வரும் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக தகவல்கள் பரபரவென சிறகடித்து வருகின்றன.





முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை வரும் அக்., 30ஆம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடக்கிறது. பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி தமிழகத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்று, பசும்பொன் கிராமத்துக்கு சென்று, தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக உயர் அதிகாரிகளுக்கு, டெல்லியில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்