INDIAN 7

Tamil News & polling

ஜெய்ப்பூர் அரண்மனையில் நடிகை ஹன்சிகா திருமணம்!

17 அக்டோபர் 2022 10:09 AM | views : 723
Nature

'எங்கேயும் காதல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹன்சிகா. அதன்பிறகு, மாப்பிள்ளை, வேலாயுதம், தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற தமிழ் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தாலும், தெலுங்கு திரையிலும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

மான் கராத்தே, உதயநிதி ஸ்டாலினுடன் மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களும் இவருக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்து. இதனிடையே சுந்தர் சி-யின் அரண்மனை படத்தின் மூலம் பேயாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். அதோடு இவரது நடிப்பில் அண்மையில் மகா என்ற படம் வெளியாகியது.

450 ஆண்டு பழமையான அரண்மனையில் வைத்து நடைபெறும் அரண்மனை ஹன்சிகா திருமணம்.. வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி!
முன்னதாக சிம்புவுடன் காதல் உறவில் இருந்த ஹன்சிகா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இதையடுத்து இவரது திருமணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. சமீபத்தில் கூட ஹன்சிகாவின் சகோதரர் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.

தனது நடிப்பில் மும்முரம் காட்டி வந்த நடிகை ஹன்சிகாவுக்கு தற்போது 31 வயதாகும் நிலையில், அவரது திருமண செய்திக்காக அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவருக்கு இந்தாண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

450 ஆண்டு பழமையான அரண்மனையில் வைத்து நடைபெறும் அரண்மனை ஹன்சிகா திருமணம்.. வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி!

அதாவது நடிகை ஹன்சிகாவுக்கும், தொழிலதிபர் ஒருவருக்கும் இந்தாண்டு டிசம்பரில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அதுவும் அந்த திருமண விழா 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாகவும் தகவல் கூறுகின்றன.

இதற்காக திருமணம் நடைபெறவுள்ள அரண்மனையில் அறைகள் தயார் செய்யப்பட்டு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதனால், பழங்காலத் தோற்றத்துடன், அரச முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்