INDIAN 7

Tamil News & polling

இன்று நிகழும் சந்திர கிரகணம் எங்கெல்லாம் தெரியும்?

08 நவம்பர் 2022 06:06 AM | views : 464
Nature

சந்திர கிரகத்தின் போது நிலவின் ஒரு பகுதியில் முழு நிழல் பகுதி படியும். முழு நிழல் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படிவதில்லை.

நிலவின் ஒரு பகுதி அதிக இருளாகவும் மற்ற பகுதிகள் குறைந்த இருளாகவும் இருக்கும். பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காண முடியும். இன்று இந்திய நேரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முழு சந்திர கிரகணம் முடிவடைகிறது.

சென்னையில் மாலை 5.38 மணிக்கு சந்திரன் உதயமாகும் . எனவே முழு சந்திர கிரகணத்தை யாரும் காண இயலாது. ஆனால் 5.38 மணியிலிருந்து மாலை 6.11 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்கு தொடு வானில் பகுதி கிரகணத்தை வரை வெறும் கண்களால் காணலாம்.அடுத்த முழு சந்திர கிரகணம் மார்ச் 14, 2025 அன்று நிகழும் என்றும், ஒரு பகுதி சந்திர கிரகணம் அடுத்த அக்டோபர் 2023-ல் நிகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்