INDIAN 7

Tamil News & polling

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி 67 அப்டேட்ஸ் வெளியானது!! படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

02 டிசம்பர் 2022 07:09 AM | views : 620
Nature

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள தளபதி 67 படத்தின் அப்டேட்ஸ் வெளிவந்துள்ளன.

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.  இதற்கான பூஜை வரும் 5-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து 7-ம் தேதி படத்திற்கான Promo படப்பிடிப்பை நடத்துகின்றனர். அந்த படப்பிடிப்பு மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அதில் விஜய் கலந்துகொள்கிறார். அதை முடித்துக்கொண்டு படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் 15 நாட்கள் நடத்த உள்ளனர். ஆனால் அதற்கான தேதி இன்னும் இறுதியாக வில்லை.

அதே போல் சென்னை படப்பிடிப்பை முடித்துக் கொண்டு, பட குழுவினர் காஷ்மீர் செல்கின்றனர் என கூறப்படுகிறது. அங்கு படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க உள்ளனர் 7-ம் தேதி எடுக்கும் ப்ரொமோவை படம் தொடங்குவதற்கு முன்பு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.



லோகேஷ் - விஜய் இணையும் புதிய திரைப்படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார் அதேபோல் முக்கிய கதாபாத்திரங்களில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர்.

முழு நீள ஆக்சன் படமாக தளபதி 67 திரைப்படம் உருவாகவுள்ளது. இதற்கிடையே விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கலையொட்டி திரைக்கு வருகிறது.



ஜனவரி 12ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன. லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த கைதி, மாஸ்டர், விக்ரம் திரைப்படம் மெகா ஹிட்டாகியுள்ளதால் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்