லோகேஷ் கனகராஜின் அழைப்பை மூத்த நடிகர் கார்த்திக் நிராகரித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இதற்கான பூஜை வரும் 5-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து 7-ம் தேதி படத்திற்கான Promo படப்பிடிப்பை நடத்துகின்றனர். அந்த படப்பிடிப்பு மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அதில் விஜய் கலந்துகொள்கிறார். அதை முடித்துக்கொண்டு படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் 15 நாட்கள் நடத்த உள்ளனர். ஆனால் அதற்கான தேதி இன்னும் இறுதியாக வில்லை.
அதே போல் சென்னை படப்பிடிப்பை முடித்துக் கொண்டு, பட குழுவினர் காஷ்மீர் செல்கின்றனர் என கூறப்படுகிறது. அங்கு படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க உள்ளனர் 7-ம் தேதி எடுக்கும் ப்ரொமோவை படம் தொடங்குவதற்கு முன்பு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.
லோகேஷ் - விஜய் இணையும் புதிய திரைப்படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார் அதேபோல் முக்கிய கதாபாத்திரங்களில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தில் வில்லன்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த வகையில் பிருத்விராஜ், சஞ்சய்தத் உள்ளிட்டோர் வில்லன் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதேபோன்று விஜய்க்கு இன்னொரு வில்லனாக நடிப்பதற்கு மூத்த நடிகர் கார்த்திக்கை லோகேஷ் கனகராஜ் அணுகியதாகவும், இதற்கு உடல் நிலையை காரணம் காட்டி கார்த்திக் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது. இந்தியில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் பிரசாந்த், சிம்ரன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு
தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரெயில் - கனிமொழி எம்.பி. கோரிக்கை
திருச்சி எஸ்.பி. வருண்குமார் மீது நாம் தமிழர் கட்சி புகார்
கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை எதிர்க்கும் ஆதவ் அர்ஜுனா!
பெஞ்சல் புயல்; உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!