டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட மேட்ச்சின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஒவரை இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ரா விளாசித் தள்ளியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகள் பொதுவாக நிதானமான ஆட்டத்திற்கு பெயர்போனது. தற்போது 20 ஓவர் போட்டிகளின் ஆதிக்கத்தால், முன்பை விடவும் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் சற்று அதிரடியாக ஆடத் தொடங்கியுள்ளனர்.
டெஸ்டில் கடைசி விக்கெட்டுகள் களத்தில் இருக்கும்போது, பேட்ஸ்மேன் அதிரடி ஆட்டத்தை விளையாடுவார். கடைசி விக்கெட்டுகள் எளிதில் வீழ்த்தப்படும் என்பதால் முடிந்த அளவுக்கு ரன்களை குவிக்க, பேட்ஸ்மேன்கள் இந்த யுக்தியை கையில் எடுப்பார்கள்.
அந்த வகையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த ஜூன் ஜூலையில் நடைபெற்றது. இதில் 5வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸின் போது இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரை இந்திய அணியின் பும்ரா எதிர்கொண்டார்.
இந்த ஓவரில் ஒரு வைடில் பவுண்டரி, ஒரு நோபாலில் சிக்ஸர் தவிர 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடிக்கப்பட்டது. கடைசி பாலில் பும்ரா சிங்கிள் தட்டினார். பும்ரா பேட் செய்தததன் மூலம் 29 ரன்களை எடுத்தார். ஒட்டுமொத்தமாக இந்த ஒரே ஓவரில் 35 ரன்கள் எடுக்கப்பட்டது.
2003-04 ல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரைன் லாரா,தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ராபின் பீட்டர்சன் ஓவரில் 28 ரன்களை எடுத்தார். இதுதான் டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இருந்தது.
இந்த 18 ஆண்டுகால சாதனையை இந்தாண்டில் பும்ரா முறியடித்துள்ளார். இந்நிலையில், பும்ராவின் அதிரடி ஆட்டம் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?
புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு
தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரெயில் - கனிமொழி எம்.பி. கோரிக்கை
திருச்சி எஸ்.பி. வருண்குமார் மீது நாம் தமிழர் கட்சி புகார்
கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை எதிர்க்கும் ஆதவ் அர்ஜுனா!
பெஞ்சல் புயல்; உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!