ரேஷன் கடைகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலை முகவர்களுடன், பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று நடைபெற்றது.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், ‘மக்களுக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. இதனால் முதலமைச்சர் ஆணைப்படி பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசி வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரசுடன் கலந்து வழங்கப்படும். இரும்பு சத்து, போலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்து அடங்கியது இந்த செறிவூட்டப்பட்ட அரிசி என்று கூறிய அவர், 100 கிலோ அரசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்படும். எனவே 100 கிலோ அரிசியில், ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படும். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்றார்.
தொடர்ந்து பேசுகையில், கடந்த காலத்தை விட 3 முதல் 4 மடங்கு அதிகமாக அரிசி கடத்தலை தடுத்துள்ளோம். தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் முற்றிலும் ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கப்படும் என்றார்.
பொங்கல் பரிசுத்தொகை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “ பொங்கல் பரிசு தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்.” என்றார்.
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!