INDIAN 7

Tamil News & polling

விஜய்தான் ஃபியூச்சர் சூப்பர் ஸ்டார் : வாரிசு இசைவெளியீட்டு விழாவில் சரத்குமார் புகழாரம்!

25 டிசம்பர் 2022 02:29 AM | views : 750
Nature

சூரியவம்சம் படத்தின் வெற்றி விழாவில் Future Super Star என்று விஜயை கூறினேன் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சரத்குமார் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தன்னுடைய சூரியவம்சம் படத்தின் 175 ஆவது நாள் விழாவை நினைவு கூர்ந்தார். அந்த விழாவில் நடிகர் விஜய்யை ஃபியூச்சர் சூப்பர் ஸ்டார் என்று கூறினேன். அது இன்று நிறைவேறி உள்ளது என்று தெரிவித்தார். அப்போது கலைஞர் என்னய்யா சொல்கிறார் என்று கேட்டார். அதற்கு வருங்காலத்தில் பெரிய ஆளாக வருவார் என்று தெரிவித்ததாகவும் பெருமிதம் அடைந்தார்.

இது குடும்ப படம்! குடும்ப படம் என்று சொன்னாலும் இது Total Entertainer. Total entertainer of India என்று சொன்னால் அது விஜய்தான் என்று புகழ்ந்தார் சரத்குமார்.

சூரியவம்சம் விழாவில் சொன்னதைப் போல இப்போது சொல்கிறேன் விஜய் இன்னும் உச்சத்திற்கு செல்வார் என்றும் சரத்குமார் தெரிவித்தார்.



சரத்குமாரை தொடர்ந்து பிரகாஷ்ராஜ் பேசுகையில், இந்த திரைப்படத்தில் நான் வில்லனாக நடித்திருக்கிறேன் என கூறினார். ரொம்ப ரொம்ப சந்தோஷம், 14 ஆண்டுகளுக்குப் பிறகு, விஜய் உடன் இணைகிறேன். இந்த படத்தின் காட்சியில் நடிக்கும் போது இந்த கண்ணை பார்த்து எவ்வளவு நாள் இன்று விஜய் கூறியதாக தெரிவித்தார்.

மேலும் இந்த 14 ஆண்டுகளில் அசூர வளர்ச்சி. ஒரு காட்சிய எப்படி கொண்டு போகனும், ஒரு காமெடிய எப்படி கொண்டு போகனும், ஒரு அழுகைய எப்படி கொண்டு போகனுக்னு தெரிந்து வைத்திருக்கிறார். என்னுடைய வெற்றிக்கு நான் காரணம் இல்லை, ரசிகர்கள்தான் என நம்புகிறார்.

எல்லோருக்கும் வயதானா அனுபவம் வரும் ஆனால் இவர் அழகாகிறார். I am Became your fan என்று கூறி பேச்சை முடித்தார் பிரகாஷ்ராஜ்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்