தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 போட்டித் தேர்வு 7,301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. அதனால் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி-யில் குரூப் 4 தேர்வு அதிகப்படியான பணியிடங்களைக் கொண்டு அறிவிக்கப்படும். தமிழ்நாட்டின் அரசின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியத் தகுந்த பணியாளர்களை இத்தேர்வின் மூலம் தேர்வு செய்வர். ஒரு நிலை தேர்வு மட்டும் கொண்டு தேர்வு செய்யப்படுவதால் இப்பணிக்கு பெரும்பாலானோர் விண்ணப்பிப்பர். 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 30.03.2022 ஆம் நாள் 7,301 பணியிடங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஜூலை மாதம் 24 ஆம் நாள் இப்பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. அதில் சுமார் 18 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளனர். இப்பணிகளுக்கான தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது.
ஆனால் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் மகளிர் இட ஒதுக்கீடு குறித்த நீதிமன்ற தீர்ப்பு முடிவுகள் வெளியிடுவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தியது. நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முடிவுகளுக்கான திட்ட அட்டவணையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.
முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆக தேர்வர்கள் சிரமம் அடையத் தொடங்கினர். இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்ட அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதில் குரூப் 4 பணியிடங்கள் குறிப்பிடப்படாமல் தேர்வு 2024 ஆம் ஆண்டு குறிப்பிடப்பட்டு இருந்தது. 2023 ஆம் ஆண்டு அட்டவணையில் குறைந்த அளவிலேயே பணியிடங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை மேலும் தேர்வர்கள் மற்றும் தேர்வுக்குத் தயார் ஆகுபவர்களை அதிருப்தி அடையச் செய்தது.
அந்த நிலையில், தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி முடிவுகள் தாமதம் ஆவது மற்றும் அட்டவணை குறித்த விளக்கத்தை அளித்தனர். அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைத் தவிர இதர தேர்வாணையத்தில் மூலமாகவும் தகுதியானவர்களை அரசுப் பணியில் நியமனம் செய்வதாகவும், முடிவுகள் விரைந்து வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதனிடையே, குரூப் 4 முடிவுகள் டிசம்பரில் வெளியாகாது, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகலாம் என்ற தகவல்களும் வெளியானது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2022 ஆம் பணியிடங்களில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் அதிகரிப்பதாகத் தெரிவித்தனர். இதனால் பணியிடங்களின் எண்ணிக்கை 9,801 ஆக உயர்ந்தது.
தற்போது டிசம்பர் 29 ஆம் நாள் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள முடிவுகளுக்கான திட்ட அட்டவணையில் 2022 ஆம் ஆண்டு 7,301 பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!