INDIAN 7

Tamil News & polling

இணையத்தை கலக்கும் விக்ரம் பிரபுவின் ரெய்டு பட பாடல்

07 ஜனவரி 2023 12:43 PM | views : 722
Nature

நடிகர் சிவாஜியின் பேரன், நடிகர் பிரபுவின் மகன் என பெரிய அடையாளங்களுடன் தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கினார் விக்ரம் பிரபு. அதற்கேற்ப அவரது நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான கும்கி படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது. விக்ரம் பிரபு திரையுலகில் அறிமுகமாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கும்கி, வெள்ளைக்காரத்துரை போன்ற சில படங்களைத் தவிர அவர் நடித்த பெரும்பாலான படங்கள் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான டாணாக்காரன் படம் விக்ரம் பிரபுவுக்கு நல்ல பெயரைப் பெற்றுதந்தது. இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருந்தார். இந்தப் படம் வசூல் சாதனை படைத்தது.

டாணாக்காரன், பொன்னியின் செல்வன் படங்களுக்கு பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் படம் என்பதால் ரெய்டு படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ரெய்டு படத்தை கார்த்தி என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். இந்தப் படம் சிவராஜ்குமார் நடித்துள்ள தகரு என்ற கன்னட திரைப்படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. கொம்பன், விருமன் படங்களின் இயக்குநர் முத்தையா இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.



ரெய்டு படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்காரத்துரை படத்துக்கு பிறகு விக்ரம் பிரபு - ஸ்ரீ திவ்யா படத்தில் இணைந்து நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்திலிருந்து என்ட மாட்டாத என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை சிவம் பாடியுள்ளார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்