INDIAN 7

Tamil News & polling

குழந்தை திருமணங்கள் முழுமையாக முடிவுக்கு வரும்: ஸ்மிரிதி இரானி

21 பிப்ரவரி 2023 03:51 AM | views : 666
Nature

புதுடெல்லி :2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி. இவர் குழந்தைகள் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பில் குழந்தை திருமணங்களை தடுப்பது தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கை டெல்லியில் நேற்று நடத்தினார். இதில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "குழந்தை திருமணம் ஒரு குற்றம். அதை நாம் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். குழந்தை திருமணத்தை முற்றிலும் நிறுத்தி சரித்திரம் படைப்போம். 23 சதவீதமாக இருக்கும் குழந்தை திருமணங்களை பூஜ்ஜியமாக குறைக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. குழந்தை திருமணத்தை தடுக்க சட்டம் தன் கடமையை செய்கிறது. ஆனால் மக்களும் அரசோடு இணைய வேண்டும்" என்று கூறினார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்