வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. 60 தொகுகிகளைக் கொண்ட நாகாலாந்து மாநிலத்தில் ஆளும் NDPP- பாஜக கூட்டணி 35க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
எனவே, முதலமைச்சர் நைபியு ரியோ தலைமையில் மீண்டும் NDPP- பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் காணப்படுகிறது. இந்நிலையில், நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார். 1963ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் உருவானதில் இருந்து இதுவரை 13 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.
ஆனால், ஒருமுறை கூட பெண் ஒருவர் வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைந்ததில்லை. இப்படி இருக்கு 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் 4 பெண்கள் களம் கண்டனர். இதில் திமாபூர்-3 தொகுதியில் ஹேகானி ஜாகாலூ என்ற பெண் பாஜக கூட்டணி கட்சியான NDPP சார்பில் வேட்பாளராக களம் கண்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட LJP வேட்பாளரை விட 1,536 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனை இவர் பெற்றுள்ளார்.
47 வயதான ஹேஜானி ஜாகாலூ சட்டப் படிப்பு முடித்து வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர், மேட் இன் நாகாலாந்து என இ-காமர்ஸ் தளத்தை தொடங்கி மாநிலத்தின் இளம் தொழிலதிபராக விளங்கி வருகிறார். 2018ஆம் ஆண்டில் இவருக்கு நாட்டின் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. வடகிழக்கு மாநிலத்தில் இருந்து இந்த விருதை பெற்ற முதல் நபர் இவர். NDPP கட்சியின் மற்றொரு பெண் வேட்பாளரான சல்ஹூதுவோனுவோ க்ரூஸ் (Salhoutuonuo Kruse) தான் போட்டியிட்ட மேற்கு அங்காமி தற்போது முன்னிலையில் உள்ளார். இவரும் வெற்றி பெறும் பட்சத்தில் நாகாலாந்து சட்டப்பேரவைக்குள் இரு பெண் எம்எல்ஏக்கள் முதல் முறையாக நுழைவார்கள்.
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
யார் இந்த மு.க.முத்து? வறுமையில் வாடிய மு.க.முத்துவிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த ஜெயலலிதா!
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகி.. மனிதர்களையும் கடிக்கத் துணிந்த திமுகவினர் - டிடிவி தினகரன்...
ஏசி பயன்படுத்திய காமராஜர்..! ஏசி பயன்படுத்திய புகைப்படம்.. ஆதாரம் கொடுத்த திமுக
கூட்டணி ஆட்சிதான்... அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம் - அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!