மாரி செல்வராஜுக்கு தலைவலியாக மாறிய பகத் பாசில்!

By Admin | Published in செய்திகள் at ஜூலை 31, 2023 திங்கள் || views : 145

மாரி செல்வராஜுக்கு தலைவலியாக மாறிய பகத் பாசில்!

மாரி செல்வராஜுக்கு தலைவலியாக மாறிய பகத் பாசில்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த படம் மாமன்னன். இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருந்தார். இதுதான் அவர் நடித்த கடைசி படம் என்பதால் இதனை பிரம்மாண்டமாக உருவாக்கி இருந்தனர். குறிப்பாக வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகள் ஏராளமானோர் நடித்திருந்தனர். அதோடு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இப்படம் ரிலீஸுக்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக இயக்குனர் மாரி செல்வராஜ், மாமன்னன் பட ஆடியோ லாஞ்சில் கமல் முன்பே தேவர்மகன் படத்தை விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இப்படத்தில் தான் தேவர்மகன் படத்தில் வரும் இசக்கி கேரக்டரை வைத்து தான் எடுத்துள்ளேன் என்றும் கூறி இருந்தார். இதனால் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியது மாமன்னன்.

இதன்பின்னர் படம் கடந்த ஜூன் 29-ந் தேதி ரிலீஸ் ஆன பின்னர், படத்தை பார்த்த ஏராளமானோர் இது முன்னாள் சபாநயகர் தனபாலின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை படமாக்கி இருப்பதாக கூறினர். ஒருசிலரோ இது திருமாவளவனை பற்றியது என்றும் ஒப்பிட்டு பேசினர். இறுதியாக சமூக நீதி மற்றும் சமத்துவம் பற்றி நேர்த்தியாக அரசியல் பேசிய இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இது பாக்ஸ் ஆபிஸில் ரூ.72 கோடி வசூலித்து இருந்தது.

வழக்கமாக ஒருபடம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி 28 நாட்களுக்கு பின்னர் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும். அந்த வகையில் மாமன்னன் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன 28 நாட்கள் கழித்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 27-ந் தேதி ரிலீஸ் ஆனது. ஓடிடியிலும் மாமன்னன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் தான் தற்போது நெட்பிளிக்ஸில் இந்தியளவில் அதிகம் பார்க்கப்படும் படமாக உள்ளதோடு, டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தையும் பிடித்துள்ளது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மாமன்னன் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னர் அது சமூக வலைதளங்களில் வேறு விதமாக டிரெண்டாகி வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மாமன்னன் படத்தில் சாதி வெறி பிடித்த வில்லன் கதாபாத்திரமான ரத்னவேலு என்கிற கேரக்டரில் பகத் பாசில் நடித்திருந்தார். அவரின் கேரக்டர் சற்று மாஸ் ஆனதாக காட்டப்பட்டு இருக்கும்.

தற்போது அந்த கொடூர வில்லன் கதாபாத்திரத்தை ஹீரோ போல் சித்தரித்து இணையத்தில் பதிவிடப்படும் மீம்ஸ் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அவரது கேரக்டருக்கு எந்தப் பாடல் போட்டாலும் செட் ஆகிறது எனக் கூறி விதவிதமான பாடல்களை போட்டு பகத் பாசில் கேரக்டரை கொண்டாட தொடங்கி உள்ளனர்.

இந்த எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் எல்லாம் பார்க்க நன்றாக இருந்தாலும், அதன்பின்னணியில் இருக்கும் ஆபத்து தான் தற்போது பேசு பொருள் ஆகி உள்ளது. இந்த வீடியோவை பல்வேறு சாதியை சேர்ந்தவர்களும், தங்கள் சாதி பெருமை பேசும் பாடல்களோடு எடிட் செய்து வருவதால், இது இளம் தலைமுறையினர் மத்தியில் சாதிவெறியை தூண்டிவிடுமோ என்கிற அச்சமும் எழத் தொடங்கி உள்ளது.

சிலரோ பகத் பாசில் போன்ற ஒரு தரமான நடிகரை வில்லனாக நடிக்க வைத்தால் இதுதான் பிரச்சனை என பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னர் மாமன்னன் படம் மாரி செல்வராஜுக்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.

FAHADH FAASIL மாமன்னன் மாரி செல்வராஜ் வடிவேலு பகத் பாசில் கீர்த்தி சுரேஷ்
Whatsaap Channel
விடுகதை :

டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.

விடுகதை :

இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?

விடுகதை :

கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?

கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் டும்...டும்...டும்...

கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் டும்...டும்...டும்...

தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் 'நடிகையர் திலகம்' படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் 'தெறி' படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் விரைவில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட துபாயை சேர்ந்த தொழிலதிபர்

புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரெயில் - கனிமொழி எம்.பி. கோரிக்கை

தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரெயில் - கனிமொழி எம்.பி. கோரிக்கை

திருச்சி எஸ்.பி. வருண்குமார் மீது நாம் தமிழர் கட்சி புகார்

திருச்சி எஸ்.பி. வருண்குமார் மீது நாம் தமிழர் கட்சி புகார்

கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை எதிர்க்கும் ஆதவ் அர்ஜுனா!

 கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை எதிர்க்கும் ஆதவ் அர்ஜுனா!

பெஞ்சல் புயல்; உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பெஞ்சல் புயல்; உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்  -  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

prev whatsapp Twitter facebook next