INDIAN 7

Tamil News & polling

சாதிய பிரிவினைகளை தூண்டும் மாரி செல்வராஜ் - கிருஷ்ணசாமி குற்றசாட்டு!

08 ஆகஸ்ட் 2023 04:17 AM | views : 714
Nature

மாமன்னன் படம் வெற்றிகரமாக ஓடியுள்ள நிலையில், அதுகுறித்த சர்ச்சைகளும், பரபரப்புகளும் இன்னும் அடங்கவில்லை.. படம் வெளியாவதற்கு முன்பிருந்தே இது தொடர்பான சர்ச்சைகள் கிளம்பிவிட்டன.

உதயநிதி - வடிவேலுவின் சீன்களை வரவேற்று, சோஷியல் மீடியாவில் மீம்ஸ்கள் தெறிக்கவிடப்பட்டன. ஆனால், இதுவே, அடுத்த சில நாட்களில் தலைகீழாக மாறிவிட்டது. ரத்தினவேலுவாக நடித்த பகத் பாசிலை சில சமூகத்தை சேர்ந்தவர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்

சோஷியல் மீடியா முழுவதுமே, கடந்த சில நாட்களாகவே, பகத் பாசில் டிரெண்டாகிவிட்டார்.. தேவராகவும், கவுண்டராகவும், வன்னியராகவும் அந்தந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் ரத்தினவேல் சீன்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மிக முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, 'மாமன்னன்' திரைப்பட இசை வெளியிட்டு விழாவில் டைரக்டர் மாரி செல்வராஜ், சம்பந்தமேயில்லாமல், தேவர் மகன் படத்தை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். அதிலிருக்கும் கதாபாத்திரம்தான் மாமன்னன் படத்திலும் வந்திருக்கிறது என்றார்.

இது முழுக்க முழுக்க வியாபாரம் நோக்கம் கொண்டது... படம் எடுக்க எத்தனையோ கதைக்கருக்கள் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு மறுபடியும், மறுபடியும் சாதியை வைத்துப் படம் எடுப்பது தேவையில்லாதது.. மாரி செல்வராஜ், நல்ல கதைகளை வைத்துப் படமெடுக்க வேண்டும்.. பகத் பாசில் கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பகத் பாசில் ஒரு சிறந்த நடிகர். ஆனால், மாமன்னன் படத்தில் அவர் நடித்த ரத்னவேல் பாத்திரத்தை தவறான நோக்கத்துடன் சாதிய பிரிவினைகளை தூண்டும் வகையில் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. இது தவறானது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். சாதிய வேறுபாடுகளையும் மோதல்களையும் உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ்கள், வீடியோக்களையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்