Tamil News & polling
தேவர், அண்ணாதுரை... நடந்தது என்ன?
மதுரையில் கடவுளை பற்றி அண்ணாதுரை பேசியதும், அதற்கு தேவரின் எச்சரிக்கையும் தமிழக அரசியலில் மிக முக்கியமான வரலாறு.. இந்த செய்தியை பற்றி பல்வேறு கருத்துக்கள் பகிரப்படுகின்றன.
இந்த வரலாறை பற்றி பேசிய அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள்..
நான் பேட்டி எடுத்த பல பெருந்தகைகளில், நான்கு பேர் மதுரையில் நடந்த அந்த நிகழ்வை பற்றி பல ஆண்டுகளுக்கு முன் கூறியுள்ளனர்.. அவர்களில் இரண்டு பேர் அந்த நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டவர்கள்.
1. கிருபானந்த வாரியார் - இவர் நிகழ்ச்சி நடக்கும்போது ஊரில் இல்லை, சில நாள்களுக்கு பிறகு "தேவர்" இவரிடம் நடந்ததை கூறியதாக சொன்னார்.
2 சுத்தானந்த பாரதி - இவர் திலகர் முதல் தேவர் வரை பல தேச தலைவர்களுடன் நெருங்கி பழகியவர். தேவருடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், நடந்ததை சொன்னார்.
3. Dr. ப.இராமன் - பேராசிரியர், வரலாற்று ஆய்வாளர். இவரும் அந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்டவர்
4. சின்னப்ப கௌண்டர் - தமிழக பார்வர்ட் பிளாக் தலைவர், இவரின் அண்ணன் "கண்ணையா" அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடந்ததை சின்னப்ப கௌண்டரிடம் கூறியுள்ளார்..
என்ன நடந்தது??....
மதுரை ஆடி வீதியில் தமிழ் சங்க மாநாடு நடைபெற்றது , அதில் ஆன்மீகத்தை கொச்சை படுத்தி பேசக்கூடாது என்று முடிவெடுக்கபட்ட பிறகுதான் கூட்டம் நடந்தது. அந்த கூட்டம் நடக்கும் போது அண்ணாதுரை பெயர் நிகழ்ச்சி நிரலில் இல்லை. அந்த சமயங்களில் "காக்கா கருவக்கா கஞ்சி குடிக்கிற நெல்லிக்கா திக திமுக தெருவெல்லாம் சிரிக்குது கா" என்று மக்கள் எள்ளி நகையாடிய நிலையில் திமுக இருந்தது.. அண்ணாதுரையை பெரிதாக மக்களுக்கு தெரியாது.. P.T.ராஜன் அவர்கள் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி திடிரென அண்ணாதுரையை பேச வைத்தார்.. அண்ணாதுரை பேசுவதற்கு முன் சேலத்தை சேர்ந்த ஒரு சிறுமி அருமையாக பாடினார் அதற்காக பலரும் அவரை பாராட்டினர்.. அண்ணா அந்த சிறுமியை பாராட்டும்போது "ஆன்மீகத்தை கொச்சை படுத்தி பேசினார்" இந்த கூட்டத்தில் ஆன்மீகத்தை பற்றி கொச்சை படுத்த கூடாது என்று முடிவெடுத்த பின்னும் அண்ணா அவ்வாறு பேசினார்.. தேவருக்கு ஊர் பெரியவர்கள் சென்று இந்த விஷயத்தை சொன்னவுடன், அடுத்த நாள் தேவர் மேடைக்கு வந்து "ஆன்மீகத்தை பற்றி கொச்சையாக பேசிய அண்ணாவை" "நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்" என்ற குறளை சுட்டிக்காட்டி மிக கடுமையாக எச்சரித்தார். இதை கேட்ட சுத்தானந்த பாராதியார் "சபாஷ் முத்துராமலிங்கம்" என்று சொல்ல... அண்ணாவின் பேச்சில் புழுங்கியிருந்த மக்களிடம் பெரிய பரபரப்பு உருவானது.. மதுரை முழுவதும் தேவரின் பேச்சு பரவியவுடன், மதுரை முழுவதும் பரப்பானாது.. விழா எற்ப்பாட்டார்கள் துண்டை காணோம், துணியை காணோம் என்று ஆடி வீதியில் இருந்து வேறொரு இடத்திற்கு விழாவை மாற்றினார்கள்("திலகர் திடல்" என்று நினைக்கிறேன்). அண்ணா மதுரையில் எங்கும் வெளியே வர முடியாத அளவுக்கு பெரும் பதற்றத்தில் இருந்தார், பின் விழா எற்ப்பாட்டர்கள் தேவரிடம் மன்னிப்பு கோர, தேவரும் மன்னித்து விட.. அண்ணா மதுரையை விட்டு சென்றார்...
தேசியம் தெய்வீகம் தேவரின் உயிர் மூச்சு.. அதை கொச்சைபடுத்தினால் தேவர் கடும் எச்சரிக்கை விடுத்து தடுத்துவிடுவார்.. சிலர் இந்த நிகழ்ச்சிக்கு தேவர் வருந்தியதாகவும், எச்சரிக்கை விடவில்லை என்று தெரியாமல் பேசியுள்ளனர்..
தேவரின் அணுகுமுறையும் அவரின் செல்வாக்கும் சில எடுத்துக்காட்டு...
ஒரு முறை சுதந்திர போராட்டத்தின் போது, காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி பேசிகொண்டிருந்த போது ஆங்கிலேயனின் போலிஸ் வந்து "கண்டவுடன் சுட்டு தல்ல(Shoot at Site) அரசு ஆணை" காட்டி ஒரு வார்த்தை பேசினால் சுட்டுவிடுவேன் என்றும் கூறினார்.. சத்தியமூர்த்தி பேசாமல் இறங்கிவிட்டார். இதை கேள்விப்பட்ட தேவர், அடுத்த நாள் அதே மேடைக்கும் வந்து "காங்கிரஸ் கட்சி தலைவர் சத்தியமூர்த்தியிடம் துப்பாக்கியை காட்டிய போலிஸ் இன்று நான் பேசுகிறான் தையிரியம் இருந்தால் என்னிடம் காட்டட்டும் என்று பேசினார்.. இரண்டு மணி நேரம் பேசி மேடை விட்டு இறங்கும் வரை போலிஸ் அந்த பக்கமே வரவில்லை...
ஆங்கிலேயன் ஜாதி அடிப்படையில் "கொடிய கைரேகை சட்டத்தை இயற்றி", ஆண்மகன்கள் அனைவரும் தினமும் தங்கள் கைரேகையை பதிவிட்டு செல்லவேண்டும் என்று சொன்னான்.. அந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்த தேவர்.. மக்களிடம் தங்கள் கட்டவரலை வெட்டி அனுப்ப சொன்னார். ஆங்கிலேயன் அதில் இருந்து கைரேகையை எடுத்துகொள்ளட்டும் என்று ஆங்கிலேயனை எச்சரித்தார்..
மீனாட்சி அம்மன் கோயிலில் "ஹரிஜன ஆலைய பிரவேசம்" வைத்தியநாத ஐயர் தலைமையில் நடத்த வேண்டும் என்று ராஜாஜி முடிவெடுத்தார். ஆலைய பிரவேசத்திற்கு எதிர்ப்பு மிக அதிகமாக இருந்தது..
"ஆலயப்பிரவேசம் செய்யும் என் அரிஜன சகோதரர்கள் அனைவரின் பாதுகாப்புக்கும் நான் உத்திரவாதம் அளிக்கிறேன்" என்று தேவர் பேசினார். இந்த பேச்சு மதுரை முழுவதும் காட்டுதீ போல் பரவியது.. மதுரையில் இளைஞர்கள் ராணுவம் போல் பத்து அடிக்கு ஒருவர் என நின்று பாதுகாப்பு கொடுத்தனர். வைத்தியநாத ஐயர் தலைமையில் ஆலயப்பிரவேசம் வெற்றிகரமாக நிறைவேறியது...
பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் தனக்கு எதிர் கட்சியே இருக்க கூடாது என்று பார்வர்ட் பிளாக் கட்சியை கலைக்க முற்பட்டார்.. அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரை காங்கிரஸ் பக்கம் இழுத்து பார்வர்ட் பிளாக் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துவிட்டதாக அறிக்கையும் விட வைத்துவிட்டார்... ஆனால் பாரத பிரதமர் நேருவை எதிர்த்து தேவர் பெரு பெரிய கூட்டத்தை கூட்டினார், பார்வர்ட் பிளாக் கட்சி இணையவில்லை அது தனியாக காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை எதிர்க்கும் கட்சியாக இருக்கும் என முழங்கினார்... பாரத பிரதமர் நேரு பல முக்கிய பதவிகள் தருகிறோம் என்று கூறியும், பதவிகளை தூக்கி எரிந்து விட்டு கொள்கைகைக்காக பாரத பிரதமரை பதரடைய செய்தார்..
தேவரின் செல்வாக்கிற்கும், அவரின் அணுகுமுறைக்கும் இப்படி பல எடுத்துகாட்டுகள் உள்ளன...
மதுரையில் அண்ணாவிற்கு, தேவர் எச்சரிக்கை விடுத்ததை பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது உண்மையே, அதை எதிர்த்து "எடப்பாடி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்" வரலாறு தெரியாமல் உளறியுள்ளார்..

விஜய் Vijay சென்னை Chennai DMK திமுக TVK அண்ணாமலை Annamalai தவெக பாஜக அதிமுக BJP கனமழை Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK திருமாவளவன் சீமான் மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு ADMK டிடிவி தினகரன் செங்கோட்டையன் Thirumavalavan Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் PMK Seeman Sengottaiyan முக ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை பாமக வானிலை ஆய்வு மையம் Tamilaga Vettri Kazhagam கைது Edappadi Palaniswami Congress