திருநங்கையாக நடிக்கும் ஜி.பி முத்து!

அக்டோபர் 17, 2023 | 11:12 am | views : 384
டிக் டாக் செயலி மூலம் பிரபலம் அடைந்த ஜி.பி முத்து தற்போது தான் நடிக்கும் திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஜி.பி முத்து கை, வாய் கட்டப்பட்ட நிலையில் தன்னுடைய உடம்பில் வெட்டுப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
இந்த போஸ்டரை பார்த்ததும் ரசிகர்கள் ஜி பி முத்துவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இவர் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில் ஆர்வம் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இந்த நிலையில் டிக் டாக் செயலி ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் டிக் டாக் மூலமாக பல பேர் வாழ்க்கை சீரழிந்து இருக்கின்றது. ஒரு சிலர் அந்த செயலி மூலமாக புகழுின் உச்சத்தில் வளம் வந்து இருந்தனர். அதில் ஒருவர் தான் ஜிபி முத்துவும். தன்னுடைய வட்டார வழக்கில் பேசிய வீடியோ வெளியிட்டு அதோடு தன்னுடைய டான்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருந்தார்.
அப்போது அதிகமான நெகட்டிவ் கருத்துகள் அவருக்கு குவிந்து வந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அதையே ஒரு கண்டன்ட்டாக மாற்றி ஜி பி முத்து அவர்களை திட்டிய விதம் பலரையும் கவர்ந்திருந்தது. நடிகர் வடிவேலுக்கு அடுத்த படியாக மீம்ஸ்களில் ஜிபி முத்துவின் புகைப்படங்களும வீடியோக்களும் தான் வைரலானது.
Also read... குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு!
அதைத் தொடர்ந்து தான் ஜி பி முத்துவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பமானதும் அமர்க்களமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி கொண்டிருந்த ஜிபி முத்து ஒரு சில வாரங்களில் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று விடாப்பிடியாக கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார்.
அதற்கு பிறகும் இவரை விடாத விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஜி.பி முத்துவிற்கு அடுத்தடுத்து திரைப்படவாய்ப்புகள் வரிசையாக வந்து கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் இப்போது ஆர்வம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அதில் ஜி பி முத்து பெண் கெட்டப்பில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜிபி முத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது இப்போது வைரல் ஆகி வருகிறது. இந்த திரைப்படத்தில் திருநங்கை கேரக்டரில் ஜிபி முத்து நடித்துள்ளார் என்று செய்திகள் வலம் வருக்கிறது.
அதே நேரத்தில் அந்த போஸ்டரில் ஜிபி முத்து இருக்கும் நிலையை பார்த்து அதிகமான ரசிகர்கள் இது திருநங்கைகளுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்லும் விதமாகத்தான் இந்த கதை இருக்கும் என்றும் அதே நேரத்தில் உடலில் வெட்டு காயங்களோடு இருக்கும் இவருடைய புகைப்படத்தை பார்த்ததும் பலர் அனுதாபப்பட்டும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் வழக்கம் போல ஒரு சிலர் ஜிபி முத்துவை கலாய்த்தும் வருகின்றனர். எப்படியோ ஆரம்பத்தில் தோல்விகள் ஏற்பட்டு தற்கொலை முயற்சி வரை எடுத்து வந்த ஜிபி முத்து இன்று தன்னுடைய விடா முயற்சியால் அடுத்தடுத்து வளர்ந்து கொண்டிருக்கிறார். இதுபோல இன்னும் வாய்ப்புகள் வர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் வாழ்த்துகிறார்கள்.
![]() |
![]() |
![]() |
![]() |
குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு!
மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதில் இன்னும் சில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது.
கட்டணமின்றி ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த