INDIAN 7

Tamil News & polling

ஓ.பி.எஸ்., அணி நிர்வாகியை கார் ஏற்றிக் கொலை செய்த பஞ்சாயத்து தலைவி கணவர்!

17 பிப்ரவரி 2024 08:59 AM | views : 879
Nature

ஸ்ரீவைகுண்டம் அருகே ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகன் நல்லகண்ணு (50). இவர் ஓ.பிசி அணியின் ஒன்றிய செயலாளராக உள்ளார். மேலும் சொந்தமாக வாழைத்தோட்டம் வைத்துள்ளார். இந்நிலையில் இன்று காலை நல்லக்கண்ணு ஸ்ரீவைகுண்டம் - சுப்பிரமணியபுரம் ரோட்டில் வந்தபோது அவரை மர்ம நபர் கார் ஏற்றி கொலை செய்துள்ளார்.



இதுகுறித்து தகவல் அறிந்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன், டிஎஸ்பி மாயவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நல்லக்கண்ணுவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. சங்கர் கணேஷ் மனைவி பார்வதி ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.



இந்நிலையில், இன்று காலை காரில் சங்கர் கணேஷ் வந்து கொண்டிருந்தபோது, நல்லக்கண்ணு அவரை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றாராம். இதனால் அவர் கார் நல்லக்கண்ணுவை கார் ஏற்றி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப் பதிந்து, சங்கர் கணேஷை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்