INDIAN 7

Tamil News & polling

காமராஜரின் சாதிப்பாசம் மறைக்கப்பட்ட வரலாறு!

By E7 Tamil 15 ஜூலை 2021 06:08 AM
Nature

"காமராஜரின் அயோக்கியத்தனமான அரசியல் மற்றும் மறைக்கப்பட்ட வரலாறு"

1. மாநில எல்லைச் சீரமைப்பில் காமராஜர் நாடார் அவர்களின் இனப்பற்று வெளிப்படையாகவே தெரிந்து போனது திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, பத்மநாதபபுரம் ஆகிய வியாபாரி நாடார்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளை சென்னை மாகணத்தோடு இணைப்பதில் காட்டிய அக்கறையினை கேரள இடுக்கி மாவட்டத்திலுள்ள பீர்மேடு, தேவிகுளம், முல்லைப்பெரியாறு, தேக்கடி, குமுளி, மூணாறு போன்ற நாடார் இன மக்கள் வசிக்காத மூப்பனார், நாயக்கர், தேவமார், அரிஜன இஸ்லாமியர் வாழும் பகுதிகளை இணைப்பதில் அக்கறை காட்டவில்லை. இன்று வரை இப்பகுதி வாழ் தமிழ் மக்கள் காமராஜர் நாடார் மீது பெரும் மனக்குறையுடன் தான் கேரள மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அன்றே இப்பகுதி இணைப்பு குறித்து எதிர்கட்சிகளும், எல்லாப் பத்திரிகைகளும் எவ்வளவோ எழுதியும் காமராஜர் நாடார் கண்டு கொள்ளாதவராகவே இருந்துவிட்டார்.

2. 1954-ல் மொழிவாரி மாநிலம் பிரிந்த பிறகு தமிழ்நாடு முதன் மந்திரி பதவி மீது காமராஜர் நாடாருக்கு ஆசை ஏற்படுகிறது. அதற்கு மற்ற கட்சித் தலைவர்களிடமும் சுய மரியாதை இயக்கத் தலைவர்களிடமும் ஆதரவு கேட்டுப் பெற்ற காமராஜர் நாடார் பசும்பொன் பெருமகனாரிடம் ஆதரவு கேட்க ஸ்ரீ வரதராஜலு நாயுடு வீட்டில் சந்திப்பு நடக்கிறது. அவரிடம் காமராஜர் நாடார் பிராமணார் அல்லாத அமைச்சரவை அமைத்து அதில் தான் முதன் மந்திரியாக வேண்டும் என்று தெரிவிக்கிறார். அதற்கு பசும்பொன் பெருமகனார் காமராஜர் மாகாண காங்கிரஸ் தலைவர் பதவியோடு இருப்பது நல்லது என்றும் "உங்களைப்பற்றித் தெரியும் (காமராஜர் நாடார் இனப்பற்று மிக்கவர்) இந்தப் பதவிக்கு ஆசைப்படக்கூடாது என்றும் பசும்பொன் பெருமகனார் மறுத்துவிட காமராஜர் நாடாக்கு தேவர் மீது வெறுப்பு தோன்றுகிறது.

3. இதற்கு முன்னரே தேவர் பெருமகனார் பற்பல கூட்டங்களில் விருதுநகர் வியாபாரிகள் பற்றி பேசி வந்தார்.

"நிலத்திலிருந்து எடுக்கப்படும் இரும்பு, தங்கம், வெள்ளி, நிலக்கரி, பெட்ரோல் பொருட்கள், புகையிலை, கரும்பு, உலோகம் மற்றும் தாதுப் பொருட்கள் முதலான விளை பொருட்களை அரசே எடுத்துக் கொண்டு அதற்குரிய விலையை நிர்ணயம் செய்கிறது.

ஆனால் தரமாக விளையக்கூடிய பொருட்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி அதைத் தரம் பிரித்து வணிகம் செய்து தரமில்லாத பொருட்களை கலப்படம் செய்து விற்று அதை உண்ண வைக்கிறார்கள்"

"வயலில் இடுப்பொடிய விவசாயம் செய்கிறான் நம் விவசாயி உடம்பில் உப்புப்பரிய பருத்தி எடுக்கிறாள் எம் பெண் மக்கள். ஆனால் அதற்கு விலை வைப்பதோ விருதுநகர் வியாபாரி. இது எந்த வகை நியாயம் இதையெல்லாம் அரசாங்கம் நிர்ணயம் செய்து விவாசாயிகளுக்கு உரிய தொகை கிடைக்கச் செய்ய வேண்டாமா??? என்று மேடைகளில் பேசினார். விருதுநகர் வியாபாரிகள் கலப்படம் செய்து தரமில்லாத பொருட்களை விற்கிறார்கள். வியாபார தர்மத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்கிறார்கள் என்று பல கூட்டங்களில் பேசி வந்தார்கள்.

அன்றைய சினிமாவிலும், நாடாகமேடைகளிலும் கூட கலப்படம் பற்றி பாட்டுக்கள் பல வந்துள்ளன. உதராணமாக ஒரு பாட்டு...

"இருந்தா முக்காலணா இல்லேன்னா காலாணா! லேபிள் இருந்தா முக்காலணா! இல்லேன்னா காலணா! பழைய புட்டி பழைய டப்பா டப்பா டப்பா என்ன டப்பா...."

என்று பாட்டு அப்போது மிகவும் பிரபலம். இது விருதுநகர் நாடார் வியாபாரிகளுக்கு என்றே எழுதப்பட்டது போலிருக்கும்.

அப்போது ஹார்லிக்ஸ் டப்பா டின், பால்பவுடர் டப்பா, முகப்பவுடர் டப்பா, காப்பித்தூள் டப்பா, டின்கள் இவைகளில் லேபிள் கிழியாமல் இருந்து கொடுக்கப்படும் டப்பா மற்றும் டின்களுக்கு கூடுதல் காசும், லேபிள் இல்லாமலும் கிழிந்தும் இருக்கும் டப்பா மற்றும் டின்களுக்கு குறைந்த காசும் கொடுத்து விலைக்கு வாங்கினார்கள் கூடை வியாபாரிகளான நாடார் வியாபாரிகள். இவைகள் அன்று கலப்படம் செய்து விற்பதற்குப் பயன்பட்டன.

இப்படியெல்லாம் பசும்பொன் பெருமகனார் பேசியதனால் தூத்துக்குடி நாடார் வியாபாரி ஒருவர் கோபம் கொண்டு "இவரை வெட்டிப் போட்டுவிட்டு ஜௌயிலுக்குப் போனால் தப்பில்லை" என்று பேசியிருக்கிறார். இதை கேள்விப்பட்ட பெருமகனாரும்...

"என்ன ஒருவனை கொல்வதால் அவர்களுக்குத் திருப்தி எனில் என்னைக் கொன்று விட்டுப் போகட்டும். நான் இறந்தாலும் என் போன்ற ஆயிரமாயிரம் முத்துராமலிங்கத்தைப் பெற்றெடுக்கும் சக்தியுள்ளவள் என் பாரத மாதா" என்று பேசினார்.

4. பசும்பொன் பெருமகனார் காமராஜர் நாடார் கள்ளநோட்டு அடிப்பவர்களுக்கு உடந்தையாக இருக்கிறார் என்று பல மேடைகளில் பேசினார். இதுபற்றி திரு.கே.ஆர் நல்லசிவம் எம்.எல்.ஏ அவர்கள் 1957 அக்டோபர் மாதம் 29ந் தேதி சென்னை மாகான சட்டசபை கூட்டத் தொடரில் ஒரு கேள்வி எழுப்புகிறார்.

"ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் திரு. காமராஜர் நாடார் அவர்கள் கள் நோட்டுகளை அச்சிட்டு விநியோகிப்பதற்கு உடந்தையாக உள்ளார்கள் எனக் குறிப்பிட்டதாகச் செய்தி வந்தது. நாட்டிலும் இதுபற்றி அநேகப் பேச்சுக்கள்.

குறிப்பாக இராண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் வந்திருக்கிறது. விலைவாசிகள் உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. சர்கார் ஒரு பங்கு அதாவது 500 கோடி ரூபாய்க்கு நோட்டுக்கள் வெளியிட்டார்கள் என்றால் அதைப்போல் வெளியில் இருப்பவர்கள் இன்னொரு மடங்கு 500 கோடி ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சிட்டார்கள் என்று சந்தேகப்படுகிறேன்" என்று பேசினார்.

அதற்கு காமராஜர் நாடாரின் பதில்...

திரு. காமராஜர் நான் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகிக்றேன் என்பதை நீங்கள் நம்புகீறீர்களா...! அச்சிட்டு விநியோகிக்க நான் உடந்தையாக இருக்கிறேன் என்பது போலவே பேச்சு இருக்கிறது. அதை நீங்கள் நம்புகிறீர்களா...?

திரு.கே.ஆர். நல்லசிவம் எம்.எல்.ஏ உண்மையில் அவர் அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என்றுதான் கேள்விப்பட்டேன். செல்வாக்குள்ள பத்திரிக்கைகளில் பத்தாயிரம், இருபதாயிரம் பிரசுரமாகிற பத்திரிகைகளில் இதைப்பற்றி எழுதியிருந்தார்கள். ஆகவே இது பொய் என்பதை நிரூப்பதற்காகவாவது ஏன் அப்போதே முதல் மந்திரி அவர்கள் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் பேரில் வழக்குத் தொடரவில்லை என்று தான் கேட்கிறேன்.

உண்மையில் அந்த குற்றச்சாட்டுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றால் நாட்டுமக்கள் உண்மையை அறிந்து கொள்ள அந்தக் குற்றச்சாட்டைச் சுமத்திய ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் பேரில் வழக்கு நடத்தியிருக்க வேண்டும். அவர் என்ன சாதாரணமானவரா..? ஒரு பொறுப்புள்ள அங்கத்தினர் பாராளுமன்றம் உறுப்பினர்.

இந்தக் கேள்விக்கு காமராஜர் நாடார் பதில் சொல்லாமல் மெளனம் சாதித்தார்.

5. பசும்பொன் பெருமகனார் சென்னை திருவல்லிக்கேணி கூட்டத்தில் காமராஜர் நாடார் கள்ள நோட்டு அடிக்கத் துணை போகிறார் என்று பேசியதைக் கேட்ட ஐ.ஜியின் நடவடிக்கையால் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டுகளுடன் விருதுநகர் நாடார் வியாபாரி நாராயணசாமி கைது செய்யப்படுகிறார். ஆனால் அவரை காமராஜர் நாடார் சிபாரிசு செய்து வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க இயலாதவாறு செய்து விடுவிக்கப்படுகிறார்.

அந்த விருதுநகர் வியாபாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாதா என்று சட்டசபையில் கேள்வி கேட்கப்பட்ட போது திரு. காமராஜர் நாடாருக்குப் பதிலாக திரு. சி. சுப்பிரமணியம் பதில் கூறுகிறார். "இந்த கேஸை மேற்கொண்டு நடத்த முடியவில்லை என்று கூறுகிறார். ஏனெனில் காமராஜர் நாடார் சம்பந்தப்பட்டிருந்து தெரிய வந்திருக்கும் அதனால் மூடிமறைத்துவிட்டனர்.

6. அப்போது காமராஜர் நாடாரின் மந்திரி சபையில் மந்திரிகள் லஞ்சம் வாங்கியது சம்பந்தமாக பசும்பொன் பெருமகனார் குற்றம் சாட்டிப் பேசினார். காமராஜர் நாடாரின் சக மந்திரி ஒருவர் லஞ்சமாகப் பணம் பெற்றுக் கொள்ளாமல். ஒருவரிடம் "பிளாங்க் செக்" வாங்கிய விவகாரம் அப்போது பிரபலமாகப் பேசப்பட்டது. அம்மந்திரி பெயர் பி. பரமேஸ்வரன். அவருக்கு அடுத்த தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை.

7.1955 தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் 13 சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு செய்ததில் 12 சப்- இன்ஸ்பெக்டர்கள் நாடார் இன மக்களாகவே காமராஜர் நாடாரின் சிபாரிசுகளால் தேர்வு செய்யப்பட்டனர். கள்ளநோட்டு அச்சிட்டதாக அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆன தேனி தியாகராஜன் அவர்கள் மீது வதந்திகளும் கோயம்புத்தூர் கிருஷ்ணன் மில் அதிபர் மீது நாறு ரூபாய் கள்ள நோட்டு வழக்கும் நடந்த செய்தி தமிழகம் மற்றும் இந்தியாவையே உலுக்கியது.

8. உண்மையான காங்கிரஸ்காரர்களும், காமராஜர் நாடாரால் மனம் நொந்து போன தேசியவாதிகளும் சேர்ந்து பசும்பொன் தேவர் பெருமகனார் தலைமையில் சீர்திருத்த காங்கிரஸ் என்ற கட்சியை தோற்றுவித்து 1957 தேர்தலில் 80 இடங்களில் போட்டியிட்டு 26 இடங்களில் வெற்றி பெறுகின்றனர்.

இந்த வெற்றியினால் அதிர்ச்சியடைந்த காமராஜர் நாடாருக்கு அடுத்த தேர்தலில் சீர்திருத்தக் காங்கிரஸ் ஜெயித்து வந்து ஆட்சியைப் பிடித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் தோன்றத் தொடங்கியது. இதனால் காமராஜர் நாடால் பசும்பொன் பெருமகனாரின் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று துடிக்கிறார்.

9. 1955-ல் பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் சீலபத்ரயாஜி மூலம் காங்கிரஸ் கட்சியில் பார்வர்ட் பிளாக் கட்சியை இணைக்க நடந்த முயற்சியை தேவர் பெருமகனார் தடுத்து விட்டதோடு நேரு நடத்திய இணைப்பு நாடகத்தை போலீ என்று மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகக்கியது நேருவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

10. இராண்டாம் முறை பர்மா சென்று வந்த பசும்பொன் பெருமகனார் "நேதாஜி உயிருடன் இருக்கிறார். அவரைப் பார்த்து விட்டுதான் வருகிறேன். அவர் நலமுடன் இருக்கிறார். இப்போது அவர் யுத்த முனையில் இருக்கிறார். என்று கல்கத்தாவில் பத்திரிக்கை நிருபர்கள் கூட்டத்தில் பேசியது நேதாஜி இறந்து விட்டார் என்று நம்ப வைக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்த நேருஜிக்கு மிகுந்த கோபத்தோடு தலைவலியைக் கொடுத்தது.

"உண்மையான சுதந்திரம் 1937லிலேயே வந்திருக்க வேண்டும் பத்து வருடகால தாமதத்துக்குக் காரணமே அப்போதுள்ள காங்கிரஸ்காரர்கள் தான் என்றும்...

"இந்தியாவின் வீரமகனான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் தலையை அடமானமாக வைத்துதான் பிரிட்டிசாரிடம் சுதந்திரம் பெற்றது காங்கிரஸ். இது கேவலமான சுதந்திரம் என்று பேசியதும் நேருவூக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

1937-ல் இருந்து தொடர்ந்து எம்.பியாக இருப்பவரை எப்படியாவது பாராளுமன்றத்துக்கு வரவிடாமல் செய்து விடுங்கள் என்று காமராஜர் நாடாருக்கு நேருஜி கட்டளை இடுகிறார்.

மேலே நேருவுக்கு நேதாஜி சம்பந்தமாக தேவர் பெருமகனாரால் பெரும் தலைவலி நெருக்கடி கீழே தமிழ்நாட்டில் காமராஜர் நாடாருக்கு தன் இனமக்களின் பிரச்சனைகளைப் பேசியதால் இடைஞ்சல் ஆகியவை தனி மனிதரான தேவர் பெருமகனாரை நேரடியாக சமாளிக்க முடியாமல் இரண்டு அரசுகளின் முலம் ஒரு சதித் திட்டம் தீட்டப்படுகிறது.

அதுதான் இராமநாதபுரம் ஜாதிக் கலவரம். அதற்கு பகடைக் காயாகப் பயன்படுத்தப்பட்டு பலிகாடாவாக ஆக்கப்பட்டவர்தான் காங்கிரஸ் பிரதிநிதியான இமானுவேல்...

அப்போதைய முதல் மந்திரியான காமராஜர் நாடாரின் ஆலோசனையின் பேரில் அரிஜன நலத்துறை மந்திரியான கக்கன் அவர்களுக்கு இமானுவேல்க்கு கட்சியில் பல பதவி தருவதாகக் கூறினார். அரிஜனங்களின் ரிசர்வ் தொகுதிகளில் தேர்தலுக்கு நிற்பதற்கான தகுதி இந்து அரிஜனுக்குத் தான் உண்டு. ஆகவே கிறிஸ்தவரான இமானுவேலுவை இந்து மதத்திற்கு மாற்றி இமானுவேல் சேகரன் என்று பெயர் மாற்றம் செய்தார்கள். ஆனால் கக்கன் அவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் காமராஜர் நாடார் எந்த பதவியும் அவருக்குத் தராமல் காலதாமதம் செய்தார். இதை அப்போதைய அரிஜன மக்கள் நன்கு உணர்ந்து கொண்டிருந்தன.

காமராஜர் நாடார் படிக்காதவராக இருந்தாலும் தனது இன மக்களுக்கு அனுசரனையாகவும் கூடுதல் பற்றுதலுடனும் இருந்தார் என்பதை மேற்கூறியவைகள் எல்லாம் சான்று...

நூல்: பொக்கிஷம்

நூல் ஆசிரியர்: க.பூபதிராஜா



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு


கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ்


நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு தற்கொலை

நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு


ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து

ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு


விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக கனமழை தமிழக வெற்றிக் கழகம் சென்னை Chennai திருமாவளவன் அண்ணாமலை ADMK Annamalai பாஜக MK Stalin Tamil Nadu BJP AIADMK Thirumavalavan சீமான் தவெக மாநாடு தீபாவளி வடகிழக்கு பருவமழை எடப்பாடி பழனிசாமி இந்திய அணி indian cricket team Seeman முக ஸ்டாலின் வானிலை ஆய்வு மையம் தமிழக வெற்றிக்கழகம் TVK Conference Tamilaga Vettri Kazhagam தமிழ்நாடு Northeast Monsoon செங்கோட்டையன் TTV Dhinakaran Sengottaiyan மு.க.ஸ்டாலின் AMMK PMK Rain அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி மழை தவெக விஜய் VCK பாமக காங்கிரஸ் Edappadi Palaniswami தென்காசி Tirunelveli TVK Vijay IMD விடுமுறை மதுரை அமரன் பாலியல் தொல்லை விசிக திருச்செந்தூர் Udhayanidhi Stalin நயினார் நாகேந்திரன் வானிலை கைது தமிழக அரசு GetOut Stalin நடிகை கஸ்தூரி Ind vs Nz தனுஷ் திருநெல்வேலி திமுக அரசு GetOut Modi PM Modi Heavy Rain Congress தமிழகம் Ajith Washington Sundar M.K. Stalin rain Nainar Nagendran Thoothukudi வாஷிங்டன் சுந்தர் இந்தியா சட்டசபை தேர்தல் தூத்துக்குடி கோலிவுட் டிடிவி தினகரன்