நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாமகவின் கோரிக்கை அதிகரிப்படியாக இருந்த காரணத்தால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 நாட்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் ஆளுங்கட்சியான திமுக தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது. விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு களத்தில் இறங்கவுள்ளது. ஆனால் எதிர்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக தங்களது கூட்டணியில் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாமக மற்றும் தேமுதிகவின் அதிகப்படியான கோரிக்கை என கூறப்படுகிறது.
அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து இந்த இரண்டு கட்சிகளுக்கும் தொடர்ந்து அழைப்பு விடுப்பதால் தங்களது தொகுதிகளின் எண்ணிக்கையும் மற்ற விஷயங்களையும் அதிகமாக எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இதனால் இன்னமும் மதில் மேல் பூனையாக பாமக மற்றும் தேமுதிக இருந்து வருகிறது. இதில் தற்போது அதிமுக- தேமுதிக கூட்டணியில் ஓரளவு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பாமகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியதில் 7 மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதை விட கூடுதலாக பாமக எதிர்பார்ப்பதால் அதிமுக தனது பேச்சுவார்த்தையை கடந்த 3 தினங்களுக்கு முன்பே நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாமக எம்எல்ஏ அருள் தனது தனிப்பட்ட விஷயத்திற்காக சந்தித்ததாகவும், கூட்டணிக்காக சந்திக்கவில்லையெனவும் கூறப்படுகிறது.
அதிமுக- பாமக கூட்டணி பேச்சுவார்த்தையில் வட மாவட்டங்களில் வன்னியர்கள் வாக்குகள் அதிகமாக உள்ள 7 தொகுதியையும் பாமக கேட்டுள்ளது. இதற்கு அதிமுக தரப்பில் பாமக வாக்கு வங்கி அதிகமாக உள்ள 7 தொகுதியையும் பாமகவிற்கே ஒதுக்கிவிட்டால் அதிமுகவிற்கு என்ன பயன் என அதிமுக வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.
இதன் காரணமாகவே பாமகவை தங்கள் அணிக்கும் இழுக்கும் பேச்சுவார்த்தை நிறுத்திக்கொண்டதாக அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. எனவே இன்று மாலை நடைபெறும் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டு நாளை சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடியோடு அன்புமணி மேடையேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!