INDIAN 7

Tamil News & polling

பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சிஎஸ்கே!

23 மார்ச் 2024 02:08 AM | views : 766
Nature

ஐபிஎல் போட்டிகளின் தொடக்க விழா சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஐபிஎல் போட்டிகளை இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு ரசித்தனர். ஐபிஎல் போட்டிகளின் தொடக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் அசத்தலான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.



மேலும், பாலிவுட் பிரபலங்களான அக்சய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோரது கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிக்கெதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி இருபது ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்தது.

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரஹ்மான் ஆட்டநாயகன் விருதை பெற்றார். அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்