INDIAN 7

Tamil News & polling

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு- கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் போட்டி

23 மார்ச் 2024 04:08 PM | views : 844
Nature

மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது.ஏற்கனவே அறிவித்தபடி, சென்னையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.நாம் தமிழர் கட்சியின் சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் ? என்ற பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 40 தொகுதிகளின் வேட்பாளர்களையும் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்துள்ளார்.இதில், கிருஷ்ணிகிரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுவதால் அறிவிக்கப்பட்டுள்ளார்.நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களில் 20 பேர் பெண் வேட்பாளர்கள்.

அப்போது அறிமுக கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-தனித்து நிற்கிறோம், தனித்துவத்தோடு நிற்கிறோம். தனித்து நின்று உண்மையான உயரத்தை காட்ட வேண்டும் என்பதாலே தனித்து நிற்கிறோம். மாற்று மாற்று என்று பேசிவிட்டு பின்பு அதே கட்சியுடன் கூட்டணி வைப்பது ஏமாற்று.சின்னத்தை பார்த்து வாக்களிப்பதை விட்டுவிட்டு எண்ணத்தை பார்த்து வாக்களியுங்கள்.இங்கு கூடியிருப்பது சீமானுக்கான கூட்டம் அல்ல. சீமான் ஏற்றுக்கொண்ட தலைவனுக்கான கூட்டம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்