POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்த விவகாரம்: முடிவுக்கு வந்த அண்ணாமலையின் வீடியோ சர்ச்சை

2 years ago 30 மார்ச் 2024 05:13 AM | views : 209
நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதற்கிடையே, கோவையில் தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை மறைத்து வைத்து பணம் கொடுப்பதுபோல் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி காவல்துறைக்கு உத்தரவிட்டார். இந்த குறித்து அண்ணாமலை கூறுகையில், இந்த வீடியோ கடந்த ஆண்டு 'என் மண் என் மக்கள்' யாத்திரையின்போது எடுக்கப்பட்டது. அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது தமிழகக் கலாச்சாரத்தில் உள்ளது.

தேர்தல் நேரத்தில் மட்டும் இதனை நாங்கள் கடைபிடிப்பதில்லை என்று தெரிவித்தார். இந்த வீடியோ தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்த துவங்கினர். இந்த நிலையில், ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு அண்ணாமலை பணம் கொடுப்பது போல் பரவிய வீடியோ, 2023 ஜூலையில் எடுக்கப்பட்டது என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இது தேர்தல் விதிமுறை மீறலில் வராது என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK AMMK ANNAMALAI ADMK தவெக எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN டிடிவி தினகரன் PMK உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU மு.க.ஸ்டாலின் MK STALIN AIADMK பாமக காங்கிரஸ் கனமழை பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் கோவை இந்திய அணி CONGRESS திருமாவளவன் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் COIMBATORE கைது EDAPPADI PALANISWAMI தமிழகம் பிரதமர் மோடி சீமான் சட்டசபை தேர்தல் முக ஸ்டாலின் கொலை INDIAN CRICKET TEAM KEERTHY SURESH THIRUMAVALAVAN வன்னியர் அமமுக OPS தேவர் நெல்லை மதுரை PARLIAMENT ELECTION TAMIL ACTRESS சூர்யா தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை தென்காசி AJITH SURIYA கொரோனா ஓபிஎஸ் NELLAI ASSEMBLY ELECTIONS அன்புமணி தமிழக சட்டசபை தேர்தல் அஜித் PRIME MINISTER MODI ELECTION COMMISSION BIGG BOSS TAMIL விடுமுறை திருப்பரங்குன்றம் CSK கள்ளக்காதல் பாலியல் தொல்லை மோடி கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி