INDIAN 7

Tamil News & polling

மோடியை தமிழகத்திற்கு முதன்முதலில் அழைத்து வந்து அறிமுகப்படுத்தியவர் பாரிவேந்தர்: அண்ணாமலை புகழாரம்

31 மார்ச் 2024 03:38 PM | views : 851
Nature

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து பெரம்பலூர் நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

2013-ம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது தமிழகத்திற்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியவர் டாக்டர் பாரிவேந்தர்.தி.மு.க.வில் அப்பா நேரு மந்திரி! பிள்ளை அருணுக்கு பெரம்பலூர் எம்.பி தொகுதிக்கு சீட்! ஒரு குடும்பத்திற்கு எத்தனை பதவி தான் கொடுப்பாங்க?தி.மு.க. 2021 சட்டப்பேரவை தேர்தலில் அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் இருபதைக் கூட நிறைவேற்றவில்லை இந்த இரண்டரை ஆண்டுகளில்.

பெண்களை அவமானப்படுத்தக்கூடிய கட்சியாக தி.மு.க. இருக்கிறது. அமைச்சர் துரைமுருகனின் மகனான வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் கூறுகிறார், தி.மு.க. ஆட்சியில் பெண்கள் மினுக் மினுக் என இருக்கிறார்களாம். தி.மு.க. மகளிர் உதவித்தொகையில் அழகு கிரீம் தடவிக் கொண்டிருக்கிறார்களாம். இப்படியா தாய்க்குலத்தை கேவலப்படுத்துவது?பெண்களை மரியாதையாக, பாதுகாப்பாக நடத்தும் கட்சி பாரதிய ஜனதா.

அரியலூர், பெரம்பலூர், முசிறி, நாமக்கல், துறையூர் பகுதிக்கான ரெயில்வே திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும்.அடித்தட்டு மக்களுக்காக உழைக்கக் கூடிய பாரிவேந்தர் வெற்றி பெற ஒவ்வொரு பாரதிய ஜனதா தொண்டரும், தலைவர்களும் உயிரைக் கொடுத்து பாடுபட வேண்டும்.பிரதமர் மோடி பாரிவேந்தருக்காக தாமரைச் சின்னத்தில் வாக்கு சேகரிக்க வருகை தர இருக்கிறார். பிரதமர் மோடியின் பேரன்பைப் பெற்றவராக பாரிவேந்தர் திகழ்கிறார் என தெரிவித்தார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதி என்ற இளைஞர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை,



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்