INDIAN 7

Tamil News & polling

இதற்குத்தான் இவ்ளோ சீனா.. பாகிஸ்தானை கிரிக்கெட் அணியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

07 ஜூன் 2024 04:25 PM | views : 760
Nature

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் தோல்வியை சந்தித்தது. ஜூன் 6ஆம் தேதி டாலஸ் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 159/7 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய அமெரிக்காவும் சரியாக 20 ஓவரில் 159/3 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது.

அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் அமெரிக்கா 18/1 ரன்கள் எடுத்தது. ஆனால் அதைத் துரத்திய பாகிஸ்தான் 13/1 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 2009 சாம்பியனான பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு உறுப்பு நாட்டு அணியிடம் முதல் முறையாக தோல்வியை பெற்று அவமானத்தை சந்தித்தது.

முன்னதாக சமீபத்திய வருடங்களாகவே தடுமாறி வரும் பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் கடந்த 2022இல் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்ல முடியாமல் மண்ணை கவ்வியது. அதைத் தொடர்ந்து 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பைகளிலும் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக அந்த 2 தொடர்களிலுமே இந்தியாவிடம் சரமாரியாக அடி வாங்கிய பாகிஸ்தான் 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக தோற்றது.

அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று பதவி விலகிய பாபர் அசாமுக்கு பதிலாக ஷாகின் அப்ரிடி புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவருடைய தலைமையில் நியூசிலாந்து மண்ணில் தோற்றதால் மீண்டும் பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் வாரியத்திலும் புதிய தலைவர் பொறுப்பேற்றார். அப்போது பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்துக்கு நிகரான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு வாரியம் கட்டளையிட்டது.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் காபூலில் பின்னல் வலை கயிற்றில் மேலே ஏறுவது, கற்களை தூக்கிக்கொண்டு மலை ஏறுவது உட்பட ராணுவத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து கடினமான பயிற்சிகளையும் வெறித்தனமாக செய்தனர். ஆனால் அந்த பயிற்சிகளை செய்த பாகிஸ்தான் சொந்த மண்ணில் இளம் வீரர்களைக் கொண்ட நியூசிலாந்து அணியிடம் 2 – 2 (5) என்ற கணக்கில் போராடி தொடரை சமன் செய்தது.


அத்துடன் அயர்லாந்துக்கு எதிராகவும் சமீபத்தில் ஒரு போட்டியில் தோற்ற பாகிஸ்தான் தற்போது அமெரிக்காவிடம் மண்ணை கவ்வியுள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் இதற்குத்தான் ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற மற்ற அணிகள் செய்யாத ராணுவ பயிற்சிகளை நீங்கள் இவ்வளவு சீனாக மேற்கொண்டீர்களா? என்று கலாய்த்து வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தான் அணியினர் பயிற்சியை மேற்கொண்ட வீடியோவை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்