INDIAN 7

Tamil News & polling

இந்தியாவின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்.. பாண்டிங் பாராட்டு

10 ஜூன் 2024 04:21 PM | views : 937
Nature

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா வெறும் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக ரிசப் பண்ட் 43, அக்சர் படேல் 20 ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 120 ரன்களை சேசிங் செய்த பாகிஸ்தான் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணியை அதிரடியாக விளையாடாமல் துல்லியமாக பந்து வீசி மடக்கிப்பிடித்த இந்திய பவுலர்கள் 20 ஓவரில் 113/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். அதனால் டி20 உலகக் கோப்பையில் குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது.

பாண்டிங் பாராட்டு:
அந்த வெற்றிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா 3, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினர். இந்நிலையில் இப்போட்டியில் ரோகித் சர்மா தம்முடைய பவுலர்களை கச்சிதமாக பயன்படுத்தி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியதாக ரிக்கி பாண்டிங் பாராட்டி உள்ளார். குறிப்பாக ஹர்ஜித் பாண்டியா மற்றும் பும்ரா ஆகியோரைப் பற்றி ஐபிஎல் தொடரால் ரோஹித் நன்றாக தெரிந்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அந்த ஐபிஎல் அனுபவத்தை பயன்படுத்தி ரோகித் சர்மா இப்போட்டியில் அசத்தியதாக தெரிவிக்கும் அவர் அக்சர் படேலையும் பாராட்டியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா மிகவும் அனுபவமிக்க கேப்டன் அல்லவா? இன்று அவரைப் பார்த்து உங்களுடைய கேப்டன்ஷிப் அபாரமாக இருக்கிறது என்று நான் சொல்வேன். இதை விட இன்னும் அவரால் அசத்தியிருக்க முடியாது”

“உண்மையில் இந்த பவுலர்களை அவர் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் கொண்டிருந்தார். எனவே அவர்களை நன்றாக புரிந்து வைத்துள்ள அவருக்கு எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது நன்றாக தெரிகிறது. கேப்டனுக்கு திட்டம் போடுவது மட்டுமே வேலை. பவுலர்கள் அதை முன்னோக்கி எடுத்துச் சென்று செயல்படுத்துவார்கள். அந்த வகையில் ஹர்திக் பாண்டியா அசத்தினார்”


“வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்திய மைதானத்தில் 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்த அக்சர் படேல் பெரிய விக்கெட்டை எடுத்தார். 2வது இன்னிங்ஸில் பிட்ச் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஆனால் சூரியன் வந்ததும் அது காய்ந்து நன்றாக மாறியது. எனவே நீங்கள் அதற்கு தகுந்தார் போல் விரைவாக உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதை அக்சர் படேல் சிறப்பாக செய்தார்” என்று கூறினார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்