ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ஜூன் 12ஆம் தேதி நடைபெற்ற 25வது லீக் போட்டியில் அமெரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அமெரிக்கா 20 ஓரில் 110/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீபன் டைலர் 24, நிதிஷ் குமார் 27 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதைத் தொடர்ந்து 111 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி 0, ரோஹித் சர்மா 3 ரன்களில் அவுட்டானாலும் ரிஷப் பண்ட் 18, சூரியகுமார் யாதவி 50*, சிவம் துபே 31* ரன்கள் எடுத்தனர். அதனால் 18.2 ஓவரில் 113/7 ரன்கள் எடுத்த இந்தியா வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் நேத்ராவல்கர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் அமெரிக்கா தோல்வியை சந்தித்தது.
மிரட்டிய அர்ஷ்தீப்:
இந்த வெற்றிக்கு 4 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய அர்ஷ்தீப் சிங் முக்கிய பங்காற்றிய ஆட்டநாயக்கன் வருகை வென்றார். முன்னதாக இந்தப் போட்டியின் முதல் ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் முதல் பந்திலேயே அமெரிக்காவின் ஷாயன் ஜஹாங்கீரை கோல்டன் டக் அவுட்டாக்கினார். அதன் வாயிலாக ஒரு சர்வதேச டி20 போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
அதே ஓவரின் கடைசி பந்தில் அடுத்ததாக வந்த ஆண்ட்ரீஸ் கௌஸ் 2 ரன்களில் அர்ஷ்தீப் வேகத்தில் அவுட்டானார். அதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியின் முதல் ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனையை அர்ஷ்தீப் படைத்தார். அதே வேகத்தில் துல்லியமாக செயல்பட்டு 4 ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சிறந்த பவுலிங்கை (4/9) பதிவு செய்த இந்திய பந்து வீச்சாளர் என்ற ரவிச்சந்திரன் அஸ்வினின் 10 வருட சாதனையை உடைத்த அர்ஷ்தீப் சிங் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2014 டி20 உலகக் கோப்பையில் மிர்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 11 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.
அந்த வகையில் இன்று பும்ரா கொஞ்சம் தடுமாற்றமாக செயல்பட்ட குறை தெரியாத அளவுக்கு துல்லியமாக செயல்பட்ட அர்ஷ்தீப் தம்முடைய தரத்தை காண்பித்தார். இதைத் தொடர்ந்து இந்தியா சூப்பர் 8 சுற்றில் வலுவான ஆஸ்திரேலியாவை ஜூன் 24ஆம் தேதி செயின்ட் லூசியா நகரில் எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!