தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

சச்சின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

சச்சின் சாதனையை முறியடித்து ரோகித் சர்மா புதிய சாதனை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரர் ஆக குறைந்த இன்னிங்ஸ்களில் 9 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் ரோகித் சர்மா இந்த சாதனையை நிகழ்த்தினார். 181 இன்னிங்ஸ்களில் 9 ஆயிரம் ரன்களை அவர் கடந்துள்ளார்.

இதற்கு முன்பு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தொடக்க வீரர் ஆக 197 இன்னிங்ஸ்களில் 9 ஆயிரம் ரன்களைக் கடந்தது சாதனையாக இருந்தது. தற்போது அதனை ரோகித் சர்மா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel