தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

திண்ணைல கிடந்தவனுக்கு வந்த வாழ்க்கை... கிண்டல் செய்தவருக்கு சூரி கொடுத்த அசத்தல் பதில்

நடிகர் சூரி நடிப்பில் அண்மையில் வெளியான 'மாமன்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் `மண்டாடி' என்ற படத்தில் சூரி நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவை சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், "எங்கள் ராஜாக்கூர் மண்ணின் மகிழ்ச்சியில், குடும்பத்தோடு தீபாவளி" என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவில் ஒருவர், "திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை" என்று கிண்டல் அடித்திருந்தார்.

அவருக்கு பதில் அளித்த சூரி, " திண்ணையில் இல்லை நண்பா. பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்…அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது.

நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்" என்று அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். சூரியின் இந்த பதில் இணையத்தில் வைரலாகியுள்ளது.

திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை ??

— Black moon ♐ (@vjdurai8) October 21, 2025
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel