IPL 2026 | ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 223 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் 2026-ன் 40-வது போட்டி நியூ சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக விளையாடி 11 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கொனோலி 14 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் சிங் 44 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயாஸ் அய்யர் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக விளையாடி 27 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் கடைசி ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கும், அடுத்த இரண்டு பந்தை சிக்சருக்கும் விரட்டி 20 பந்தில் அரைசதம் விளாசினார். கடைசி இரண்டு பந்துகளில் பவுண்டரிகள் விளாசினார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்துள்ளது.

Tags / குறிச்சொற்கள்: IPL 2026
பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel