தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!

இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம்வந்த பாரதிராஜா, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி இயக்குநர் பாரதிராஜா சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலையில் காலமானார்.


இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் பாரதிராஜாவின் வீட்டுக்கு இன்று காலை நேரில் சென்ற முதல்வர் விஜய், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.மேலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகை சுகாஷினி, நடிகர் சூர்யா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்து அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர்.



இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel