தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து ஆலோசனை செய்ய நாளைவரை அவகாசம் கோரிய மத்திய அரசு!
டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சித் தொடங்கிய நீட்டுக்கு எதிரான மற்றும் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் தொடர்பான போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் இப்போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கரப்பான்பூச்சி கட்சியுனருடன் பலகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் தர்மேந்திர பிரதான் பதவி விலகல், நீட் தேர்வால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம், உயர்கல்வித்துறையில் சீர்த்திருந்தங்களை மேற்கொள்ளுதல் என மூன்று கோரிக்கைகளை கரப்பான்பூச்சி கட்சியினர் முன்வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து இன்று இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது பிரதானின் பதவி விலகல் கோரிக்கை சமரசத்திற்கு அப்பாற்பட்டது என கரப்பான்பூச்சி கட்சியினர் மத்திய அரசின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர்.
“கல்வி அமைச்சரின் ராஜினாமாவே, ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் சி.ஜே.பி. போராட்டங்களின் மையக்கருவாக இருந்து வருகிறது. பிரதான் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்” என எச்சரித்ததாக பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட சி.ஜே.பி. தேசிய செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக ஆலோசிக்க நாளை மதியம் வரை மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.