உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு.. மத்திய அரசுக்கு அபிஜீத் தீப்கே மூன்று கோரிக்கைகள்..

தேசிய அளவில் நீட் தேர்விற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் இந்த நிகழ்விற்கு காக்ரோச் ஜனதா கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிஜேபி-யின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறுகையில், “இந்தியாவில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு, இந்த நிகழ்வே சான்றாக உள்ளது. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார்.

நீங்கள் பயப்படாமல், இந்த அரசுக்கு அடிபணியாமல் இருந்தால், எங்களால் யார் ராஜினாமாவையும் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு இந்த ராஜினாமா சான்று.

இளைஞர்கள் பயப்படத் தேவையில்லை. இது ஜனநாயகம், அவர் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் எங்களுக்கு இன்னும் இரண்டு கோரிக்கைகள் உள்ளன.

நாங்கள் இப்படியே போகமாட்டோம். இந்த நீட் வினாத்தாள் கசிவில் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்

அவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அது அவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டும்.

இரண்டாவதாக கடந்த 20ஆம் தேதி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எங்களுக்கு எழுத்து பூர்வமாக எழுதி தரவேண்டும்.

நினைவில் கொள்ளுங்கள் கரப்பான் பூச்சிகளுடன் விளையாடாதீர்கள்” என்று கூறினார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel