தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

பா.ம.க நிறுவனர் ராமதாஸூக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ராமதாஸூக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் பாமக நிறுவனர் ராமதாஸூக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

விழுப்புரம் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் மனைவியுடன் ராமதாஸ் பங்கேற்றார். விழா மேடையில் மனைவி மற்றும் மகனுடன் அமர்ந்து ராமதாஸ் பேசியதாவது:-

* எனது 88-வது பிறந்தநாளான இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்.

* அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன், பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார்.

* தலைசுற்றல் இருந்ததால் 20 நாட்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன் என்றார்.

பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார் என்று ராமதாஸ் கூறியபோது விழாவில் கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel